உலக கிரிக்கெட்

வதந்தி பரப்பாதீங்க.. இந்திய டெஸ்ட்னால எங்களுக்குள்ள இந்த பிரச்சனைனு .. நான் அப்படி சொல்லல – ஆஸி ஹேசில்வுட் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தடுமாறி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிற நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலாவது டெஸ்ட் போட்டியின் போது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் சிக்கலில் ஆஸ்திரேலியா அணி இருந்தபோது பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த அணி வீரர் ஹேசில்வுட்டிடம் ஆஸ்திரேலியா அணியின் திட்டம் என்ன என்கிற விதத்தில் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் நீங்கள் இந்த கேள்வியை பேட்ஸ்மேனிடம் கேட்க வேண்டும். நான் பிசியோ அல்லது முதலுதவி பெற வேண்டிய இடத்தில் இருக்கிறேன். மேலும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்கிறேன் என்று கூற அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக காயம் அடைந்து வெளியேறிய நிலையில் இவருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடு என்கிற ரீதியில் தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில் அது குறித்து தற்போது பதில் அளித்து இருக்கும் ஹேசில்வுட் எனக்கும் அணி வீரர்களுக்கும் இடையே இந்த பிரச்சனையும் இல்லை என்கிற ரீதியில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

எந்தப் பிரச்சனையும் இல்லை

இதுகுறித்து அவ்வாறு விரிவாக கூறும்போது “எனது முழு வாழ்க்கையிலும் நான் ஒரு பகுதியாக இருந்த இறுக்கமான அணி இதுவாகும். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்திருக்கிறோம். நான் கூறிய கருத்துக்கள் சூழலுக்கு கொஞ்சம் வெளியே இருந்தது போன்று தோன்றி இருக்கலாம். இதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக நான் கூறி இருக்கலாம். ஆனால் எனக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதுதான் உண்மை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:2 வருஷமா ரோஹித் இந்த பிரச்சினைல இருக்காரு.. இதை மட்டும் சரி செஞ்சா அவர்தான் பெஸ்ட் – ஹர்பஜன் சிங் கருத்து

இரண்டாவது போட்டியில் ஹேசில்வுட் காயம் அடைந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் போலன்ட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது காயம் குணமடைந்திருக்கும் நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

- Advertisement -
Published by

Recent Posts