திடீர் ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்.. காரணம் என்ன.. ஆஸி கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது?

0
834
Maxwell

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர் கிளன் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்திருக்கிறார். அணிக்கு முக்கியமான ஆல் ரவுண்டரான அவரது இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட மேக்ஸ்வெல் காயத்தின் காரணமாக நாடு திரும்பி இருந்தார். இப்படியான நிலையில்தான் திடீரென ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது?

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சமீபத்தில் நடத்திய சாம்பியன்ஸ் டிராபி ஆஸ்திரேலியா அணியில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் இடம் பெற்று இருந்தார். ஆனால் இந்த தொடர் தொடங்குவதற்கு சில நாட்கள் இருந்த நிலையில் திடீரென ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அவர் தொடர்ந்து டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இதைவிட அதிர்ச்சியாக நட்சத்திர வீரர் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் ஒரு வாய்ப்பு கூட இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலகெங்கும் வீரர்கள் டி20 லீக்குகளில் விளையாட விரும்புகிறார்கள். இதற்கு உடல் உழைப்பு அதிகம் செலுத்தப்படுகிற ஒரு நாள் கிரிக்கெட் வடிவம் தடையாக இருப்பதால் இப்படியான முடிவை எடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேக்ஸ்வெல் ஓய்வு காரணம் என்ன?

இதுகுறித்து தனது ஓய்வு அறிக்கையில் மேக்ஸ்வெல் கூறும்பொழுது “என் உடல் நிலைமைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்படுகிறது என்பதை வைத்து பார்க்கும் பொழுது நான் என்னுடைய அடியை ஏமாற்றுவது போல் உணர்ந்தேன். நான் இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உடன் நிறைய பேசினேன். மேலும் இதுகுறித்து அவர் என்ன நினைக்கிறார் என்றும் நான் அவரிடம் கேட்டேன்”

“நாங்கள் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை பற்றி பேசினோம். நான் அவரிடம் இந்த தொடரில் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்று கூறினேன். எனவே என்னுடைய இடத்திற்கு வரக்கூடிய வீரர்களுக்காக திட்டமிட வேண்டிய நேரம் இதுவென்றும் தெரிவித்தேன். இப்போது நான் ஓய்வு பெறுவது வீரர்கள் உள்ளே வந்து என்னுடைய ரோலில் செயல்படுவதற்கு சரியான நேரம் கிடைக்கும். நான் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் கவனத்தை வைக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஷஷான்க் சிங் அலட்சிய ரன் அவுட்.. நடு மைதானத்தில் ஸ்ரேயாஸ் செய்த சம்பவம்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் 149 போட்டியில் 136 இன்னிங்ஸில் 33.81 ஆவரேஜில் 3990 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 126 என பிரம்மாண்டமாக இருக்கிறது. மேலும் நான்கு சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் அடித்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 128 பந்தில் ஆட்டம் இழக்காமல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 201 ரன்கள் எடுத்தது இவருடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் ஆக இருக்கிறது!

- Advertisement -