ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு வெற்றிக்கான காரணங்கள் குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.
இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்திய அணிக்கு பதிலடி தரும் விதமாக ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெரிய வெற்றி பெற்று தொடரை தற்பொழுது தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி பல விமர்சனங்களை சந்தித்து தன்னம்பிக்கை ரீதியாக பின்னடைவில் இருந்தது. மேலும் அந்த அணியை சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் சென்று கொண்டு இருந்தன.
இப்படியான நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியை வெல்லும் அணி, தொடரை கைப்பற்றுவதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் கொண்டிருக்கும். மேலும் எங்காவது ஒரு டெஸ்ட் போட்டி ஆனால் கூட தொடரை இழக்காமல் தப்பித்து விட முடியும். எனவே தொடரின் முதல் இரண்டு போட்டியை வெல்வது முக்கியம். இந்த வகையில் இந்திய அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்த அருமையான வாய்ப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மெகா வெற்றி குறித்து பேசி இருக்கும் பேட் கம்மின்ஸ் “இது எங்களுக்கு சிறந்த வாரமாக மாறி இருக்கிறது. நான் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் கைப்பற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் இந்த வகையில்தான் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம். எங்கள் அணிக்குள் அதிகமான சத்தங்கள் எதுவும் கிடையாது.ஸ்டார்க் ஒரு இப்படியான அற்புதமான வேலைகளை செய்து வருகிறார். இதனால் நான் அதிர்ஷ்டசாலியாகவும் பாக்கியம் செய்தவனாகவும் உணர்கிறேன்”
இதையும் படிங்க : பும்ரா கேப்டன்சில செமயா பண்ணினோம்.. ஆனா இங்க இந்த தப்புகளை பண்ணி தோத்துட்டோம் – ரோகித் சர்மா விளக்கம்
“எங்களுடைய ஹெட் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வதை மிகவும் விரும்புகிறார். அவர் பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுது எப்படி வேண்டுமானாலும் சென்று இருக்க முடியும். ஆனால் அவர் தனது சிறப்பான பேட்டிங் மூலம் மொமண்டத்தை உருவாக்கினார். மேலும் நாங்கள் திருப்பி பந்து வீசுவதற்கு எங்களுக்கு சரியான நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு நல்ல சாதகமான நிலைமை இருந்தது. ஸ்காட் போலந்து எப்போதும் போல எங்களுடன் புரிந்து கொண்டார். அடுத்த வாரத்தில் கேசில்வுட் வந்து விடுவார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.