சில பேர் எங்களால முடியாதுனு சொன்னாங்க.. ஆனா ரோகித் பும்ராவுக்கு ரொம்ப நன்றி – பேட் கம்மின்ஸ் பேட்டி

0
1317
Cummins

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரை மூன்றுக்கு ஒன்று என கைப்பற்றியது. இந்த தொடரின் வெற்றிக்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று வந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளில் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தது. 162 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

- Advertisement -

எங்களால் முடியாது என்று கூறினார்கள்

இந்த வெற்றி குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது “இந்த கோப்பையை நாங்கள் வெல்ல முடியாது என்று சிலர் கூறினார்கள். இந்தத் தொடரை சுற்றி நிறைய ஹைப் உருவாக்கப்பட்டது. நாங்கள் திட்டங்களில் தெளிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முயற்சி செய்தோம். இறுதியில் நாங்கள் எங்களுடைய வேலையை செய்தோம். நாங்கள் வெற்றி பெற்றதில் தற்போது அளவற்ற பெருமையை கொண்டிருக்கிறோம்”

“முதல் டெஸ்ட் போட்டியில் பெர்த்தில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் ஒரு அணியாக ஒன்றாக இணைந்து சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறோம். இந்த அணிவுடன் இணைந்து விளையாடுவது எனக்கு எப்பொழுதும் பிடித்தமானது. இது அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த அணி. இந்த அணியில் நான் இடம்பெற்று இருப்பதற்கு பாக்கியம் செய்திருக்கிறேன். உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படி ஒரு அணியை வைத்திருப்பது மகிழ்ச்சியானது”

- Advertisement -

கேப்டன்கள் ரோகித் சர்மா பும்ராவுக்கு நன்றி

மேலும் பேசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் “இந்த தொடரில் மூன்று அறிமுக வீரர்கள் வந்தார்கள். அவர்கள் சரியான நேரத்தில் சரியான இடங்களில் செயல்பட்டார்கள். நீங்கள் உண்மையில் தயாராக வேண்டிய ஒரு பெரிய தொடர் இது. நாங்கள் இந்த தொடரில் எழுந்து நின்ற சிறப்பான தருணங்கள் இருக்கிறது. இந்தியா போன்ற ஒரு அணியை வெல்வதற்கு உங்களுக்கு இப்படியான தருணங்கள் கட்டாயம் தேவை. எங்கள் வீரர்கள் கைகளை உயர்த்தினார்கள். எனக்கு பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இந்திய கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் மிகுந்த நன்றி!”

இதையும் படிங்க : வெறும் 26 ஓவர்.. வில் யங் அதிரடி.. சுருண்ட இலங்கை அணி.. நியூசிலாந்து அபார வெற்றி.. முதல் ஒருநாள் போட்டி

“ரசிகர்கள் இந்த தொடரை சிறப்பானதாக மாற்றினார்கள். எங்கு சென்றாலும் நம்ப முடியாத அளவிற்கு கூட்டமும் ஆதரவும் இருந்தது. மெல்போர்ன் மைதானத்தில் வேறு அளவில் இருந்தது. அது சிட்னிக்கும் அப்படியே தொடர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் ஏன் சிறந்தது? அதை ஏன் விளையாட விரும்புகிறோம்? என்பதற்கான அர்த்தத்தை இது காட்டுகிறது. அனைவரும் இந்த டெஸ்ட் போட்டிக்கு பிங்க் நிறத்தில் மாறி வந்தது, ஒரு அற்புதமான காரணத்துக்கு கொண்டாடுவது, ஆண்டை தொடங்குவதற்கு சிறந்த வழியாகும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -