நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான பந்துவீச்சு திட்டம் குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிரடியான பேட்டி அளித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான பிரிஸ்மேன் காபா மைதானத்தில் துவங்க இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க் விக்கட்டுகாக ஸ்டெம்பை அட்டாக் செய்து ஃபுல் லென்த்தில் ஸ்விங்க்காக வீசினார். அடுத்து ஸ்காட் போலன்ட் பவுலிங் மெஷின் மாதிரி குறிப்பிட்ட லைன் மற்றும் லென்த்தில் தொடர்ந்து பேசினார்.
இந்த இடத்தில் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுன்சர்கள் வீசும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்டார். இது ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல பலனை கொடுத்தது. முதல் டெஸ்டில் பந்துவீச்சில் பின்தங்கி இருந்த கம்மின்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அற்புதமாக திரும்பி வந்தார். அவருடைய பவுன்சர்கள் வழக்கம்போல் துல்லியமாக இருந்தன. இந்த நிலையில் இரண்டாவது போட்டி பந்துவீச்சு திட்டம் குறித்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் பேசும்பொழுது ” இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பவுன்சர்கள் நல்ல பலனை கொடுத்தது. எனவே இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எங்களிடமிருந்து அதிக பவுன்சர்களை எதிர்பார்க்கலாம். போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தத் திட்டத்தை கையில் எடுக்கலாம். நேற்று நான் ஆடுகளத்தை பார்த்தேன், கடந்த சில ஆண்டுகள் போலவே இந்த ஆடுகளம் நன்றாகவே இருந்தது”
இதையும் படிங்க: அடுத்த டெஸ்ட்.. ஆஸ்திரேலிய பிளேயிங் XI அறிவிப்பு.. ஜெயித்தும் முக்கிய வீரர் நீக்கம்.. இந்திய அணிக்கு பின்னடைவு
“மேலும் கடந்த முறை தென் ஆப்பிரிக்கா அணிக்கு இருந்தது போல மிகவும் பெரிய புற்கள் உடன் வேகப்பந்துவீச்சுக்கு அதி சாதகமாக இல்லை. வழக்கமாக இங்கு ஜனவரியில் வெயில் அதிகமாக இருக்கும் இதனால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். நேர்மையாக எனக்கு வேறு எதுவும் இது குறித்து தெரியவில்லை. பந்துவீச்சில் ஹேசில்வுட் சில தியரிகளை வைத்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்.