ரோகித்துக்கு பிசிசிஐ அனுப்பிய எச்சரிக்கை.. விராட் தற்காலிகமாக தப்பினார் – வெளியான தகவல்கள்

0
600
Rohit

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மோசமான பேட்டிங் பார்மில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றினை கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தற்போது இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுமோசமாக கேப்டன் ரோஹித் சர்மா விளையாடினார். இதைத்தொடர்ந்து ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காகவும் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தற்போதைய நிலையில் அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து பெயர் வெளியிடாத பிசிசிஐ அதிகாரி பேசும் பொழுது “கடந்த முறை நடந்த கூட்டத்தின் போது தேர்வுக் குழுவைச் சேர்ந்தவர்கள் ரோஹித் சர்மாவுடன் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சாம்பியன்ஸ் முடிவுக்குப் பிறகு அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறி இருக்கிறார்கள். இந்திய அணி நிர்வாகம் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு சில தனித்திட்டங்களை வைத்திருக்கிறது. இதற்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்”

- Advertisement -

தற்காலிகமாக தப்பித்த விராட் கோலி

இந்த நிலையில் இன்னொரு நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு தற்போதைக்கு எந்த விதமான நெருக்கடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் மோசமாக விளையாடுகின்ற பொழுதும் அவர் டெஸ்ட் தொடரில் ஒரு சதம் அடித்திருந்தார். எனவே டெஸ்டில் இன்னும் கொஞ்சம் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க விரும்புகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட் பொறுத்த வரையில் அவர் மீது எந்த புகாரும் இல்லை.

இதையும் படிங்க : ஒரு மோசமான சீசன்.. இவர்களை கெட்ட மனிதர்கள் ஆக்குமா.? இது ஒவ்வொரு முறையும் நடக்காது – கெவின் பீட்டர்சன் ஆதரவு

இதுகுறித்து வெளிவந்துள்ள தகவலில் “விராட் கோலியை பொறுத்தவரையில் தேர்வாளர்கள் அவருடைய டெஸ்ட் ஃபார்ம் திரும்புவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அவருடைய ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை” என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -