15 வருஷமா ரோகித்த எனக்கு தெரியும்.. இப்பவும் வாய்ப்பு இருக்கு கம் ஆன் பங்களாதேஷ் – மிட்சல் மார்ஸ் பேட்டி

0
1340
Marsh

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்த்து இன்று விளையாடியது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் வருத்தத்துடன் பேட்டி அளித்திருக்கிறார்.

இன்றைய போட்டி நடந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்தவர்கள் அதிகம் வெற்றி பெற்ற புள்ளி விவரங்களை கொண்டிருந்தது. ஆனாலும் ஆஸ்திரேலிய கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீசையை தேர்ந்தெடுத்தார். இரண்டாவது ஓவரில் விராட் கோலியை வீழ்த்தி அவர்களுக்கு நல்ல துவக்கமும் கிடைத்தது.

- Advertisement -

ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி சரவெடியில் மிரட்டி விட்டார். மொத்தம் 41 பந்துகளை மட்டும் சந்தித்து 8 சிக்ஸர்கள் விளாசி 92 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால், நாளை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஸ் மிகவும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த தோல்வி எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இன்னும் எங்களுக்கு டெக்னிக்கலி அரையிறுதி சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்று இந்தியா எங்களைச் சிறப்பாக செய்துவிட்டது. 40 ஓவர்களிலும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.

இதையும் படிங்க : ஆஸி யாருனு எனக்கு நல்லா தெரியும்.. செமி பைனல்ல இங்கிலாந்துக்கு எங்க பிளான் இப்படிதான் – ரோஹித் சர்மா பேச்சு

ஆனால் நேர்மையாகச் சொல்வது என்றால் இந்தியா சிறந்த அணியாக இருந்தது. நான் 15 ஆண்டுகளாக ரோகித் சர்மா இந்த மனநிலையில் இருந்தால் என்ன செய்வார் என்பதை பார்த்து இருக்கிறேன்.அவர் முழுக்க ஃபிளையரில் இருந்தார். நீங்கள் ரன் துரத்தும் பொழுது எல்லாமே உங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.ஆனால் இந்தியா இன்று நன்றாக இருந்தது. பங்களாதேஷை நம்புகிறோம். கம் ஆன் பங்களாதேஷ்!” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -