ஆஸி யாருனு எனக்கு நல்லா தெரியும்.. செமி பைனல்ல இங்கிலாந்துக்கு எங்க பிளான் இப்படிதான் – ரோஹித் சர்மா பேச்சு

0
1358
Rohit

இன்று டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி கொண்ட பெரிய போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு 99% உறுதியாகிவிடும் என்ற நிலை இருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தி இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இந்திய அணிக்கு விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஆனால் ஒரு முனையில் நின்று விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 41 பந்தில் 92 ரன்கள் குவித்தார். இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக 43 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். இவரது விக்கெட்டை கைப்பற்றிய பின் இந்திய அணியின் வெற்றி எளிதானது. ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டும் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆட்டநாயகன் விருது பெற்ற ரோகித் சர்மா பேசும் பொழுது “இந்த வெற்றி மிகவும் திருப்தி அளிக்கிறது. ஆஸ்திரேலியா அணி எப்படியான அச்சுறுத்தலை கொண்டுவரும் என்று நன்றாகவே தெரியும். ஒரு குழுவாக நாங்கள் சரியாக செயல்பட்டோம். மேலும் செய்ய வேண்டியதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தோம். எங்களுக்கு இது பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது.

- Advertisement -

200 நல்ல ஸ்கோர்தான், ஆனால் காற்று ஒரு காரணியாக இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாங்கள் கண்டிஷனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டோம். மேலும் தனி நபர்கள் சிறப்பாக செயல்படுவது பற்றியும், தேவையான நேரத்தில் விக்கட்டுகள் எடுப்பது பற்றியுமானது. குல்தீப் பலம் எங்களுக்கு தெரியும். ஆனால் நியூயார்க்கில் அவருக்கு சாதகம் இல்லை. தற்பொழுது அவருக்கான தேவை இருக்கிறது. அவரை சரியான இடங்களில் பயன்படுத்துகிறோம்.

இதையும் படிங்க : 48 சிக்ஸ்.. ஆஸிக்கு செம ரிவென்ச் எடுத்த இந்தியா.. ரோகித் கேப்டனாக ஸ்பெஷல் ரெக்கார்ட்.. ஆப்கான் அரையிறுதிக்கு வருமா?

நாங்கள் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறோம். நாக் அவுட் போட்டிக்கு என நாங்கள் எந்த விதமான புதியதையும் செய்யப்போவது கிடையாது. இதுவரையில் நாங்கள் எப்படி விளையாடி வந்தோமோ அதே போல நாங்கள் தொடர்ந்து விளையாட போகிறோம். நாங்கள் அடுத்து வரவிருப்பதையும் எதிரணி பற்றியும் சிந்திக்கவில்லை. அரையிறுதி போட்டி நல்ல போட்டியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -