இந்திய டெஸ்ட் தொடர்.. நட்சத்திர ஆஸ்திரேலியா வீரர் விலகல்.. எல்லா திட்டங்களும் வீணானது.. வெளியான தகவல்

0
370
Green

அடுத்த மாதம் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் ஒருவர் விலகி இருக்கிறார்.

தற்போது உலக கிரிக்கெட்டில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் மோதிக்கொள்ள இருக்கும் நிலையில் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தது. ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் இந்த தொடருக்காக சிறப்பு முறையில் தயாராகிக் கொண்டு வருகிறது.

- Advertisement -

கேப்டன் பேட் கம்மின்ஸ் திட்டம்

ஆஸ்திரேலியா டெஸ்ட் பேட்டிங் யூனிட்டில் நான்காம் இடத்தில் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்கும் ஸ் டீவ் ஸ்மித்தை துவக்க வீரராக கேப்டன் கம்மின்ஸ் மேலே அனுப்பினார். காரணம் அவருக்கு தன்னுடைய பிளேயிங் லெவெனில் பேட்டிங் யூனிட்டில் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன் மற்றும் மிச்சல் மார்ஸ் இருவருமே தேவைப்பட்டார்கள்.

இதை வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் பெரிய திட்டங்களை தீட்டி வைத்திருந்தது. இந்த நிலையில் இதில் பெரிய பின்னடைவை உருவாக்கும் விதமாக அணியின் வேகப்பந்துவீச்சு ஆள் ரவுண்டர் மற்றும் பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் விளையாடிய கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் பிராக்சர் காயம் காரணமாக அடுத்த ஆறு மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

கேமரூன் கிரீனின் காயம் எப்படி ஆனது?

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேமரூன் கிரீனுக்கு முதுகு பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்ததில் ஸ்ட்ரெஸ் பிராக்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது வேகப்பந்துவீச்சு செய்யக்கூடியவர்களுக்கு சாதாரணமானது என்றாலும். அவருக்கு இது எலும்புக்கு மிகவும் அருகில் இருந்திருக்கிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் ODI.. ஆஸி அணி அறிவிப்பு.. கேப்டன் கம்மின்ஸ் ரிட்டன்.. சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன் கடைசி தொடர்

இப்படி எலும்புக்கு மிக அருகில் இருந்த காரணத்தினால் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு செல்ல கேமரூன் கிரீன் முடிவு செய்து இருக்கிறார். மேலும் இந்த காயம் குறித்து இவ்வளவு விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. இத்தோடு அவர் ஆறு மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மட்டும் இல்லாமல் பாகிஸ்தானில்அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது!

- Advertisement -