கம்பீர் திட்டத்தை கையில் எடுத்த ஆஸி.. யாரும் எதிர்பார்க்காத முடிவு.. இந்திய அணிக்கும் சாதகம்

0
485
Rohit

இன்று இந்திய அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்திருக்கிறது. மேலும் டாஸ் வென்றும் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

தற்போது சாம்பியன் டிராபி தொடரில் முதல் செமி பைனலில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. தற்பொழுது இதற்கு டாஸ் நிகழ்வு நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் முடிவு

இந்திய அணி கடந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சென்றது போலவே நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற அடிப்படையில் மீண்டும் சென்று இருக்கிறது. ஹர்ஷித் ராணாவுக்கு மீண்டும் வாய்ப்பு முக்கியமான போட்டியில் மறுக்கப்பட்டு விட்டது.

தற்போது இந்தப் போட்டிக்கு புதிய ஆடுகளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு சாதகமாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கிறது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் எப்படி இருக்கிறது? என்று புரிந்து கொள்ள முடியும்.

- Advertisement -

கம்பீர் வழியில் ஆஸ்திரேலியா அணி

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணத்தால் விளையாடவில்லை. அவருடைய இடத்திற்கு ஜாக் பிரேசர் மெக்கர்க்கை கொண்டு வரவில்லை. அந்த இடத்திற்கு இடது கை சுழல் பந்துவீச்சு பேட்டிங் ஆல் ரவுண்டர் கூப்பர் கனோலியை கொண்டு வந்திருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு ஹெட் தேவை இல்ல.. இந்த பையனே தனியா முடிச்சிடுவான் – ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

இன்னொரு வேகப்பந்து வீச்சாளரை குறைத்து விட்டு சுழல் பந்துவீச்சாளர் ஜேசன் சங்காவையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலியா அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இந்திய அணி எப்படி செல்கிறதோ அதே வழியில் இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -