வெறும் 3 ஓவர்.. பும்ராவை தாண்டி கம்மின்ஸ் சாதனை.. இந்தியாவை வென்றது ஆஸி அணி.. 2வது டெஸ்ட்

0
353
Australia

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்று தற்போது தொடரை தற்காலிகமாக 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக அடிலைட் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்றது. முதல் போட்டியை இந்திய அணி வென்று இருக்க இரண்டாவது போட்டியை தற்பொழுது ஆஸ்திரேலியா அணி வென்றிருக்கிறது.

- Advertisement -

தரத்தை நிரூபித்த ஸ்டார்க் – ஹெட்

இதைத்தொடர்ந்து இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு நிதீஷ் குமார் ரெட்டி மட்டுமே அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஏமாற்றினார்கள். இறுதியாக இந்திய அணி 180 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிட் அதிரடியாக விளையாடி 141 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். தனி ஒரு பேட்ஸ்மேன் ஆக இந்திய அணியின் பக்கம் இருந்து ஆட்டத்தை எடுத்து சென்று விட்டார். இறுதியாக 337 ரன்கள் குவித்தது. இந்திய அணையின் தரப்பில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

மீண்டும் சரிந்த இந்திய அணி

இந்த முறை இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி மீண்டும் 175 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக சரிந்தது. இந்திய அணிக்கு மீண்டும் நிதிஷ்குமார் ரெட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 3 விக்கெட் 221 ரன் முன்னிலை.. இந்தியாவின் பைனல் வாய்ப்பை கலைக்கும் தென் ஆப்பிரிக்கா.. இலங்கை தோல்வி முகம்

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் இலக்கை 3.2 ஓவரில் எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. மேலும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பும்ரா அதிகபட்சமாக எட்டு முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். தற்போது பேட் கம்மின்ஸ் இதைத் தாண்டி ஒன்பதாவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -