3 விக்கெட் 221 ரன் முன்னிலை.. இந்தியாவின் பைனல் வாய்ப்பை கலைக்கும் தென் ஆப்பிரிக்கா.. இலங்கை தோல்வி முகம்

0
61
Bavuma

தற்போது சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 221 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா வலிமையான நிலையில் இருக்கிறது.

தற்போது இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரண்டு முக்கிய சதங்கள்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. அந்த அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கல்டன் 101, விக்கெட் கீப்பர் வெர்ன்னினே 106 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் குவித்தது. லகிரு குமாரா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி 328 ரன்கள் குவித்து ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் நிஷாங்கா 89 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 48 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் டேன் பேட்டர்சன் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா வலிமையான முன்னிலை

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருக்கிறது.மேலும் 221 ரன்கள் முன்னிலையும் பெற்று இருக்கிறது. களத்தில் ஸ்டப்ஸ் 36, கேப்டன் பவுமா 48 ரன்கள் எடுத்து நிற்கிறார்கள். மேலும் பெரிய ரன்களுக்கு செல்ல முடியும் என்பதால் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : 583 ரன் டார்கெட்.. ஜோ ரூட் அட்டகாச சதம்.. இங்கிலாந்து பிரம்மாண்ட வெற்றி.. நியூசி சொந்த மண்ணில் தோல்வி

தென் ஆப்பிரிக்கா அணி இந்த டெஸ்ட் போட்டியை வென்றால், மீண்டும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை வென்றால் போதும் என்கின்ற நிலை இருக்கிறது. எனவே இந்திய அணியை தாண்டக்கூடிய இடத்திற்கு தென் ஆப்பிரிக்கா வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தோல்வி முகத்தில் இருப்பது பெரிய பின்னடைவு.

- Advertisement -