202 ரன் 6 விக்கெட்.. நியூசிலாந்துக்கு எதிராக சவால்விடும் இலங்கை அணி.. இந்தியாவுக்கு WTC பைனல் வாய்ப்பில் நல்லது நடக்குமா?

0
167
Srilanka

நியூசிலாந்து அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. தற்பொழுது இதில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு மூன்றாவது நாளில் சரியான சவாலை அளித்திருக்கிறது.

தற்போது நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி முடித்து விட்டது, இந்திய அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை வென்றால் இந்திய அணிக்கு நன்மையாகவும், நியூசிலாந்து வெல்லும் பொழுது அது இந்தியா அணியின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் நெருக்கடியையும் உருவாக்கும்.

- Advertisement -

சரி சமமான முதல் இன்னிங்ஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 114 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் வில்லியம் ஓரூர்க் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 340 ரன்கள் எடுத்து 35 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 70, கேன் வில்லியம்சன் 55, டேரில் மிட்சல் 57 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

மூன்றாவது நாளில் மாஸ் காட்டிய இலங்கை

இன்று மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. கருணரத்தினே 84, தினேஷ் சண்டிமால் 61 ரன்கள் எடுத்தார்கள். மேலும் தொடக்க ஆட்டக்காரர் அதுவும் நிஷாங்கா 2, கமிந்து மெண்டிஸ் 13 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

அனுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் 34 ரன்கள் மற்றும் கேப்டன் தனஞ்செய டி சில்வா 34 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். மூன்று நாட்கள் முடிவில் இலங்கை அணி 202 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் அந்த அணியின் கையில் ஆறு விக்கெட் கைவசம் இருக்கிறது. இலங்கையில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

இதையும் படிங்க : 199 ரன்.. அஸ்வினுக்கு நான் அட்வைஸ் பண்றதா?.. நான் அவர்கிட்ட சொன்னது இது மட்டும்தான் – ஜடேஜா பேட்டி

எனவே இலங்கை அணி இன்னும் 60 முதல் 70 ரன்கள் எடுத்தாலே நியூசிலாந்து அணிக்கு நான்காவது இன்னிங்ஸில் கடுமையான நெருக்கடி கொடுத்து வெல்ல முடியும். தற்போது இலங்கை அணி இந்த முதல் டெஸ்டில் முன்னணியில் இருப்பது, இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கொஞ்சம் வசதியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -