ஆஸ்திரேலியா டி20 சீரிஸ்..புது இந்திய கேப்டன் அறிவிப்பு.. தொடர் குறித்த முழு விபரம்!

0
11266
ICT

இந்தியாவில் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு புதிய உலக சாம்பியன் ஆக உருவெடுத்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

12 ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை மீண்டும் இந்திய அணி கைப்பற்றும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில் இந்திய அணி ரசிகர்களுக்கும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் நேற்றைய நாள் மிகவும் சோகமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி நிர்வாகம் அடுத்து டி20 வடிவத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டிய இடத்தில் நிற்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி தற்போது உலகக்கோப்பை தொடர் முடிந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவருக்குமே ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் அணி அறிவிப்பு கூடிய விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடர் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆரம்பித்து, டிசம்பர் மூன்றாம் தேதி ஹைதராபாத்தில் முடிவடைகிறது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முழுவதுமாக சூரியகுமார் யாதவை கேப்டனாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும் டி20 வடிவத்திற்கு ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் திரும்புவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. தற்பொழுது எந்தெந்த இளம் வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்படும் என்பது சுவாரசியமான ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது!