மீண்டும் அழுக ஆரம்பித்த ஆஸ்திரேலியா; இந்திய ரசிகர்கள் கடுமையான விமர்சனம்!

0
4697
BGT

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே, ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து இந்திய ஆடுகளங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆரம்பித்துவிட்டது!

முதலில் ஆஸ்திரேலியா அணியின் லெஜன்ட் விக்கெட் கீப்பரான இயான் ஹீலி இந்தியாவில் மிக மோசமாக சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு ஏமாற்றுவார்கள் என்று கூறி ஆரம்பித்து வைத்தார்.

- Advertisement -

இதற்கடுத்து முதல் டெஸ்ட் போட்டி நடந்த நாக்பூர் ஆடுகளத்தின் புகைப்படங்கள் வெளியாக, அந்த ஆடுகளத்தின் இரண்டு பக்கங்களில் தண்ணீர் ஊற்றாமலும் ரோலர் செய்யாமலும், ஆஸ்திரேலியா இடது கை வீரர்களை குறி வைத்து வேலை செய்யப்பட்டு இருப்பதாக, ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா ஊடகங்கள், ஆஸ்திரேலியா சார்பு சமூக வலைதளங்கள், ஆஸ்திரேலியா ரசிகர்கள் என எல்லா மட்டத்திலிருந்தும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு ஐசிசி இதில் தலையிட வேண்டும் என்கிற அளவுக்கு போனது.

அடுத்து தற்போது முதல் போட்டி நடந்து முடிந்த நாக்பூர் ஆடுகளத்தை அப்படியே ஆஸ்திரேலியா நிர்வாகம் பயிற்சிக்கு கேட்டு அதற்கு நாக்பூர் மைதான நிர்வாகம் சம்மதிக்காமல் ஆடுகளத்தில் நீரை ஊற்றி பயிற்சி செய்ய விடாமல் செய்ததாக கூறப்பட்டது. தற்பொழுது இதுகுறித்து மீண்டும் பேசி உள்ள இயான் ஹீலி ” இது பரிதாபகரமானது சங்கட்டத்தை ஏற்படுத்துகிறது இதில் ஐசிசி நிச்சயம் தலையிட வேண்டும்” என்று மீண்டும் கேட்டிருக்கிறார்!

இன்னொரு புறத்தில் ஆஸ்திரேலிய ஃபாக்ஸ் கிரிக்கெட் தனது ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 1ஆம் தேதி தர்மசாலாவில் துவங்க இருந்த போட்டி இந்தூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டது குறித்து தர்மசாலா மைதானத்தில் அஸ்வின் பவுலிங் ஆவரேஜ் 12.50 அதனால்தான் அங்கிருந்து ஆட்டம் இந்தூருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது என்று குற்றச்சாட்டை வைத்திருக்கிறது!

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டிக்கு ஓயாத குற்றச்சாட்டுகளை வைத்து, பின்பு அவர்கள் ஒழுங்காக விளையாடாத காரணத்தால் மட்டுமே மோசமாக தோற்றார்கள் என்பது நிரூபணம் ஆனது. இதை ஆஸ்திரேலியா கேப்டனே ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே ஆஸ்திரேலிய மட்டத்திலிருந்து குற்றச்சாட்டுகள் ஆரம்பித்துவிட்டது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் முன்வைத்து வருகிறார்கள்!