இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் டி20.. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.. மொத்தமும் புதுசு.. இந்தியாவால் புது முடிவு

பாகிஸ்தான் அணி அடுத்த மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது இதில் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி முடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது. இதை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா உடனடியாக இந்திய அணியுடன் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் எடுத்த முடிவு

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரை விளையாடி முடித்ததும் உடனடியாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டிய தேவை இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா டி20 அணியில் டெஸ்ட் அணியில் இல்லாத வீரர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணி உடன் டெஸ்ட் தொடர் விளையாட வேண்டி இருப்பதால், ஆஸ்திரேலிய டி20 அணியில் முன்னணி வீரர்கள் பலரும் இடம் பெறவில்லை. இவர்கள் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவே வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

இளம் ஆஸ்திரேலிய அணி

தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசிரியை டி20 அணியில் மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகிய மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து கடந்த ஆண்டுகளில் அணிக்குள் வந்த டிம் டேவிட் மற்றும் ஜோஸ் இங்லீஷ் இருக்கிறார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் இளம் வீரர்கள் ஆகவே இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : இந்திய அணி தோல்விக்கு இதான் பிரச்சனை.. அவங்க ஆடுன பிராண்ட் கிரிக்கெட் இப்போ இல்ல – ஆகாஷ் சோப்ரா கருத்து

பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி

சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஆடம் ஸ்டோனிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.

- Advertisement -
Published by

Recent Posts