லெஜன்ட் ரோஹித்தின் விக்கெட்டை அரையிறுதியில் வீழ்த்தியும்.. பெருசா கொண்டாடல.. காரணம் இதான் – ஆஸி கூப்பர் கான்லி

0
292

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிபோட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த சூழ்நிலையில் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கான்லி ரோஹித் சர்மாவை அவுட் ஆக்கிய விதம் குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

அரை இறுதியில் ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. இந்த நிலையில் ரோஹித் சர்மா 28 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது ஆஸ்திரேலியா இளம் சுழற் பந்துவீச்சாளர் கூப்பர் காணொளி எல்பி முறையில் ரோகித் சர்மாவை ஆட்டம் இழக்கச் செய்தார்.

அதற்கு பின்னர் களம் இறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர் என்பது வேறு விஷயம். இருந்தாலும் ஒரு இளம் வீரர் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரை ஆட்டமிழக்க செய்து அந்த வெற்றியை பெரிதாக கொண்டாடவில்லை எனவும், அப்போது தனக்கு எதுவும் தோன்றவில்லை என்றும் அணியின் நலனுக்காக மேலும் முயற்சி செய்ய விரும்பியதாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

என் மனதில் ஏதும் தோன்றவில்லை

இது குறித்து அவர் கூறும் போது “நான் பந்து வீசும் போது ரோஹித் சர்மாவை வீழ்த்துவது என் மனதில் இருந்து முற்றிலும் விலகி இருந்தது. அப்போது என்னால் முடிந்த வரை முயற்சி செய்து போட்டியிட வேண்டும் என்று விளையாடினேன். அப்போது அணிக்கு ஒரு திருப்புமுனை கிடைக்கும் என்று நம்பினேன். ஒரு குழந்தையாக நீங்கள் எப்போதும் உங்கள் நாட்டை பிரதிநிதிபடுத்த விரும்புவீர்கள்.

இதையும் படிங்க:ஐபிஎல்ல 13 வருஷத்துக்கு முன்ன.. டிராவிட் ஸார் கேட்ட அந்த விஷயம் .. நன்றி இருக்கு – சஞ்சு சாம்சன் பேட்டி

மேலும் அரை இறுதி ஆட்டத்தில் நாங்கள் வெளியே சென்றது நம்ப முடியாத வகையில் இருந்தது. அந்த அனுபவத்திலிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்திய அணியில் முகமது சமி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அவர் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இறுதியில் இந்த போட்டி ஒரு சிறந்த ஆட்டமாக இருந்தது இந்த போட்டியில் இருந்து நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -