ஐபிஎல்ல 13 வருஷத்துக்கு முன்ன.. டிராவிட் ஸார் கேட்ட அந்த விஷயம் .. நன்றி இருக்கு – சஞ்சு சாம்சன் பேட்டி

0
58
Sanju

தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் 2013ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் டிராவிட் உடன் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட அனுபவத்தை எப்பொழுதுமே மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணியில் பெரியளவு வாய்ப்புகள் பெறாமல் இருந்து வந்த சஞ்சு சாம்சனுக்கு தற்பொழுது இந்திய டி20 அணியில் ஏறக்குறைய நிரந்தரமான இடம் கிடைத்திருக்கிறது. மேலும் இதற்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு கிடைத்து, அதில் அவர் அணியை இரண்டு வருடங்களுக்கு முன்பு இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்று இருக்கிறார்.

- Advertisement -

2013 ஆம் ஆண்டு நடந்த அந்த சம்பவம்

முதன்முறையாக 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட ஒப்பந்தமானார். அப்போது அந்த அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சஞ்சு சாம்சன் அந்த அணிக்கு கேப்டன் ஆகிவிட, பழைய கேப்டனான ராகுல் டிராவிட் அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்திருப்பது சுவாரசியமான விஷயம்.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும் பொழுது “விஷயங்கள் எப்படி நடக்கின்றது என்பது மிகவும் வேடிக்கையானது. எனக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் சீசனின் போது என்னை கண்டுபிடித்தவர் ராகுல் டிராவிட் ஸார். அவர் அப்போது கேப்டனாக இருந்தார். பல இளம் திறமைகளை தேடிக் கொண்டிருந்தார். சோதனை முகாமில் என்னை பார்த்த பொழுது அவருக்கு என்னை பிடித்து விட்டது. அவர் என்னிடம் நேராக வந்து என்னுடைய அணிக்கு விளையாட நீங்கள் தயாரா? என்று கேட்டார்”

- Advertisement -

நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்

“அன்று முதல் இன்று வரை இது மிகவும் யதார்த்தமாக இருந்து வருகிறது. நான் இந்த அணியின் கேப்டனாக மாறி இருக்கிறேன். அதே சமயத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ராகுல் டிராவிட் ஸார் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு திரும்பி வந்திருக்கிறார்”

இதையும் படிங்க : கம்பீருக்கு அவமரியாதையா?.. மெசேஜ் பண்ணிட்டேன்.. கேகேஆர்-ல என்னோட வழி இதுதான் – மெண்டர் பிராவோ பேட்டி

“இது ஒரு தனித்துவமான சிறப்பான உணர்வு. அவர் எப்பொழுதுமே ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறார். அவரை நாங்கள் மீண்டும் பெற்றதில் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அவருடைய பயிற்சியின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் இந்திய அணிக்கு விளையாடி இருக்கிறேன். தற்போது நான் கேப்டனாக இருக்கும் பொழுது அவர் பயிற்சியாளராக வந்திருப்பது மிகவும் விசேஷமானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -