ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவஜா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியான கிரிக்கெட் தொடர்களை விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதற்குப் பிறகு குறுகிய காலத்தில் இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 654 ரன்கள் குவித்தது.
அதில் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அபாரமாக விளையாடி 232 ரன்கள் குவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 242 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்திய டெஸ்ட் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியா வீரர்கள் சோர்வாக இருந்ததாகவும், இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளித்திருப்பதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கவாஜா விரிவாக கூறும்போது “சில ரன்கள் எடுத்து வெற்றி பெறும் அணிக்கு பங்களிப்பது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கையின் காலே மைதானம் எங்களுக்கு எப்போதுமே கடினமாக இருக்கும். ஆனால் சிறப்பான தொடக்கத்தை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் ஒரு மாதத்திற்கு முன்பு நானும் உலகின் உச்சியில் இருந்தேன். நாங்கள் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றோம். கிரிக்கெட் ஒரு கோல் விளையாட்டு அதில் எப்போதுமே வெற்றி பெற விரும்புவீர்கள். ஆனால் அது எப்போதுமே சாத்தியமாகாது.
இதையும் படிங்க:விராட் கோலிக்கு ரஞ்சி டிராபி தேவையில்லை.. அவருக்கு இப்போ இது மட்டுமே முக்கியம் – அம்பத்தி ராயுடு கருத்து
எனவே அது வேறு யாராவது வெற்றி பெறாமல் இருக்கும்போது அது நடக்கும் என்று நம்புகிறேன். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. அதற்கு பிறகு நாங்கள் அனைவரும் சோர்வாக இருந்தோம். ஆனால் இங்கு வந்து தொடரை சிறப்பாக தொடங்கியதில் மிக மகிழ்ச்சி அடைகிறோம். சுழல் பந்து வீச்சை விளையாடுவதில் எனக்கு சொந்த திட்டங்கள் இருக்கின்றன. எனக்கு 38 வயதாகிறது, இலங்கை எனக்கு ஐந்தாவது சுற்றுப் பயணம். நான் எல்லா தவறுகளையும் செய்து விட்டேன், சில வழிகள் எனக்கு வெற்றிகரமாக இருக்கும் சில வழிகள் எனக்கு அப்படி அமையாது” என்று கூறியிருக்கிறார்.