விராட் கோலிக்கு ரஞ்சி டிராபி தேவையில்லை.. அவருக்கு இப்போ இது மட்டுமே முக்கியம் – அம்பத்தி ராயுடு கருத்து

0
83

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஜாம்பவான் ஆன விராட் கோலி தற்போது ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடி இருக்கிறார். இருப்பினும் அவர் 6 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விராட் கோலி குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரஞ்சி டிராபியில் விளையாடிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த நிலையில் பிசிசிஐ இந்திய வீரர்கள் அனைவரையும் உள்நாட்டு தொடரில் விளையாடுமாறு அறிவுறுத்தியது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா, கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உள்நாட்டுத் தொடரில் விளையாடுகின்ற நிலையில் விராட் கோலி கடந்த 30ஆம் தேதி ரஞ்சி டிராஃபியில் டெல்லி அணிக்காக களம் இறங்கினார்.

விராட் கோலி கலம் இறங்குவதை அறிந்த ரசிகர்கள், அவரது ஆட்டத்தை காண மைதானத்தில் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் விராட் கோலி ஆறு ரன்னில் ஹமின்சு சங்வானின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விராட் கோலி ரஞ்சி டிராஃபியில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவரை தற்போது தனியாக விட வேண்டியது மட்டுமே முக்கியமாக செய்ய வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அம்பத்தி ராயுடு கருத்து

இது குறித்து ராயுடு விரிவாக கூறும்போது ” இப்போதைக்கு விராட் கோலி ரஞ்சி ட்ராஃபியில் விளையாட வேண்டியது அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் 81 சதங்கள் அடித்து அவரது பேட்டிங் தொழில்நுட்பம் எந்த அளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே விராட் கோலியை யாரும் எதற்காகவும் கட்டாயப்படுத்தக் கூடாது. இது எல்லாவற்றையும் தாண்டி விராட் கோலி தன்னை மீண்டும் நன்றாக உணர்வதற்கு அவருக்கு போதிய காலம் மட்டுமே தேவை.

இதையும் படிங்க:இது சர்வதேச கிரிக்கெட்டா ஐபிஎல்-லா?.. ஹர்சித் ராணா வந்தது தப்பு.. இவங்கதான் பொறுப்பு – அஸ்வின் விமர்சனம்

இதுவே அவருக்குள் இருக்கும் தீப்பொறியை தானாகவே பற்றவைக்கும். அடிப்படையாக அவரை மதித்து நம்புங்கள். முக்கியமாக அவரை கொஞ்சம் தனியாக விடுங்கள். அதுவே அவர் மீண்டு வருவதற்கு பெரிய உதவியாக இருக்கும்” என்று ராயுடு கூறியிருக்கிறார். இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நிலையில் அதற்கு அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. எனவே இதன் மூலம் விராட் கோலி திரும்பவும் ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -