ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இன்னும் சில தினங்களில் விளையாட இருக்கிறது. அதில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.
இந்த சூழ்நிலையில் அடுத்த போட்டியில் புதிதாக களமிறங்க உள்ள ஆஸ்திரேலியா தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்காக முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவரை நீக்கிவிட்டு இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக துவக்க வீரராக களம் இறங்க உள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியில் விளையாடிய இவர், சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இவரது திறமையை பார்த்த ஆஸ்திரேலிய நிர்வாகம் உடனடியாக இவருக்கு நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. எனவே இவர் மெல்போனில் நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் களமிறங்க உள்ளார். இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு ஆஸ்திரேலியா வீரரும் இந்திய வீரர் பும்ராவின் பந்துவீச்சை பார்த்து மிரண்டு வரும் நிலையில் பும்ரா குறித்து இவர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
பும்ரா குறித்து அவர் கூறும் போது “நான் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும்போது அவர் குறித்து நான் அதிகம் சிந்திக்க மாட்டேன். ஏனென்றால் அவரை நான் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை நானே சவால் செய்து நிச்சயமாக அவரை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். பொதுவாக எங்களது ஆய்வாளர்கள் எங்கள் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து சில ஒழுக்கங்களை ஆராய்வார்கள். எனவே அதில் மட்டும் நான் கவனம் செலுத்தி அவர் குறித்து சில விஷயங்களை பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:கோலி 10 வருஷமா இத செய்றாரு.. அவர இவங்களோட கம்பேர் பண்ணா சிரிப்புதான் வருது – பாக் முகமது அமீர் கருத்து
பும்ரா இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் மொத்தமாக 21 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் இன்னும் இவருக்கு மீதம் இருக்கும் நிலையில் அதிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுத் தருவார் என்று அனைத்து இந்திய ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவில் வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.