4483 பந்து.. 1095 நாள்.. தகர்க்கப்பட்ட பும்ராவின் சாதனை.. 19 வயது அறிமுகவீரர் அசத்தல்.. 4வது டெஸ்ட்

0
1275

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் தனது அறிமுக போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவின் சாதனையை தகர்த்திருக்கிறார்.

- Advertisement -

அறிமுக போட்டியில் விளையாடும் ஆஸி வீரர்

இதுவரை இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம்கான்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி களமிறங்கியது. முந்தைய போட்டியில் விளையாடிய நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக 19 வயது வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக போட்டியில் விளையாடுகிறார். இதன் தொடக்க ஓவரை பும்ரா வீச அதை எதிர்கொண்ட சாம் அந்த ஓவரை மெய்டன் ஆக்கினார்.

அதற்குப் பிறகு ஐந்தாவது ஓவர் வரை பொறுமை காத்த இந்த ஜோடி ஆறாவது ஓவரை பும்ரா வீச, அதனை எதிர்கொண்ட சாம் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அதற்குப் பிறகு இரண்டாவது பந்தை ராம்ப் சிக்ஸர் ஒன்றை அடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். பும்ராவின் பந்தை நேராக அடிக்கவே தடுமாறும் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில், அவரது பந்துவீச்சை நன்கு கணித்து கீப்பர் தலைக்கு மேல் அடித்த சிக்சர் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களின் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

தகர்க்கப்பட்ட பும்ராவின் சாதனை

இந்த சிக்சர் மூலமாக சாம் பும்ராவின் நீண்ட நாள் சாதனையை தகர்த்தார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு பும்ரா 4483 பந்துகள் வீசி இருக்கும் நிலையில் 4484வது பந்தில் 19 வயது இளம் வீரரான சாம் சிக்ஸர் அடித்திருக்கிறார். இதன் மூலமாக பும்ராவின் நீண்டகால சாதனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அதற்குப் பிறகு 10வது ஓவரின் 4வது பந்திலும் பும்ராவின் பந்துவீச்சில் ராம்ப் ஷாட் சிக்சர் அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இதையும் படிங்க:எனக்குத் தெரியும்.. கோலி அவருக்கு வேணும்னு தான் இதை செஞ்சாரு.. ஆஸி 4வது டெஸ்ட் – ரிக்கி பாண்டிங் பேட்டி

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 65 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 60 ரன்கள் குவித்திருந்த போது ஜடேஜாவின் வந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். தனது அறிமுக போட்டியிலேயே சிறிய அச்சமும் இன்றி பும்ராவின் பந்துவீச்சை திறம்பட கையாண்ட சாமை கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போது வரை ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -