கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“எப்ப அடிப்பாங்க கீழே விழலாம்னு ஆஸ்திரேலியா காத்துகிட்டு இருக்கு!” – மேத்யூ ஹைடன் கடுமையான தாக்கு!

நேற்று லக்னோ மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது!

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு முன்பாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் அந்த அணியை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியா, முதல் இரண்டு போட்டிகளில் வென்று அடுத்த மூன்று போட்டிகளில் தோற்று தொடரை இழந்தது.

தற்போது தென்னாப்பிரிக்காவை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சந்தித்து தொடர்ச்சியாக நான்காவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு முறையும் நூறு ரன்கள் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தருவி இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் கடந்த 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் லீக் சுற்றின் கடைசி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அரைஇறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்திருந்த ஆஸ்திரேலியா, தற்பொழுது இந்த உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்திருக்கிறது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைவது இதுவே முதல் முறை.

- Advertisement -

தற்போது ஆஸ்திரேலியாவின் தோல்வி குறித்து பேசி உள்ள அந்த அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “பத்து ஓவர்களுக்குள் ஒரு ஆப் ஸ்பின் பௌலரை நீங்கள் பந்து வீச வைத்தீர்கள். ஆனால் ஸ்லிப் வைக்கப்படவில்லை. இப்படி இருந்தால் நாம் எந்த வகையில் விக்கெட்டை எடுக்க போகிறோம்?.

இதை நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஷேன் வார்னே நினைவுக்கு வருகிறார். அவர் முதலில் சொல்லும் விஷயம் என்னவென்றால், எப்படி ஒரு விக்கெட்டை முதலில் பெறப்போகிறேன் என்பது குறித்துதான். அப்படி பந்தில் இவர்கள் எதையும் செய்யவில்லை. அது பேட்டிங்கிலும் நடக்கவில்லை. இவர்கள் எப்பொழுது வீழ்த்துவார்கள் என்று காத்திருந்தார்கள்.

முதல் மற்றும் இரண்டாவது விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. அதற்கடுத்து ஒரு மினி பார்ட்னர்ஷிப். அதற்கடுத்து மீண்டும் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. மீண்டும் ஒரு மினி பார்ட்னர்ஷிப். மீண்டும் அதே கதை.

இங்கே சுவாரசியம் என்னவாக இருந்தது என்றால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது, நாங்கள் ரன்கள் எடுக்கப் போகிறோம் என்பதற்கு பதிலாக, நாங்கள் இதிலிருந்து தப்பி பிழைக்க போகிறோம் என்பதாகவே நினைக்கிறார்கள். இதுதான் இன்றைய ட்ரெண்டிங் கதை!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -
Published by