ஆஸ்திரேலியா பலவீனமான அணி.. இந்தியா இப்பவும் பெஸ்ட்!” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரபரப்பான பேச்சு!

0
371
Australia

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முன்தினம் தோல்வி அடைந்தது.

அதில் இருந்து தோல்விக்கான காரணங்கள் குறித்து பல முன்னாள் வீரர்களும் தங்களுடைய பார்வையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பெரும்பாலான முன்னாள் வீரர்கள் இந்திய அணியை பலமான அணி என்பதாக கணித்திருந்தார்கள்.

- Advertisement -

இதற்கு சற்று விதிவிலக்காக கௌதம் கம்பீர் கூறி இருக்கும் பொழுது, எப்பொழுதும் வெற்றி பெற்ற அணி தான் சிறந்தது என்பதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் ஆஸ்திரேலியா அணியை பலவீனமான அணி என்று கூறக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கம்பீர் கருத்துக்கு நேர் எதிராக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் ஆணித்தனமாக ஆஸ்திரேலியா அணியை பலவீனமான அணி என்று கருதுகிறார். மேலும் தவறாக அமைக்கப்பட்ட ஆடுகளமே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன்னுடைய பேட்டியில் கூறும் பொழுது “இந்தியா டாஸ் தோற்றதுதான் போட்டியை தோற்றதற்கான முக்கிய காரணமாக நான் பார்க்கிறேன். போட்டிக்கு முன்பாக நாங்கள் ஆடுகளத்தை பார்த்த பொழுது, பலவீனமான ஆஸ்திரேலியா அணிக்கு தேவையில்லாமல் சாதகமான விஷயங்களை உருவாக்கியதாக நினைத்தோம்.

- Advertisement -

இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன், ஆடுகளம் மிகவும் வறண்டு கரடு முரடாக காணப்பட்டது. இதனால் பந்து தையலில் பட்டு நகர்ந்தது. மதிய நேரத்தில் பந்து பேட்டுக்கு நன்றாக வழுக்கி வரவில்லை. இதுதான் ஸ்ரேயாஸ் ஐயரை வீழ்த்தியது. மேலும் கரடு முரடாக ஆடுகளம் இருந்த காரணத்தினால் பந்து தேய்ந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இது கேஎல்.ராகுலை பார்த்துக் கொண்டது.

ரோகித் சர்மா அடித்த பந்தை டிராவிட் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்தது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய தருணம் மற்றும் ஒரு லட்சம் மக்களுக்கு எதிராக சாம்பியன் டிஎன்ஏ வை கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு ஆகும்.

எளிமையாக சொல்வது என்றால் இந்தியா தோற்றது கண்டிஷனால்தான். இந்தியா இப்பொழுதும் மிகச்சிறந்த 50 ஓவர்கள் விளையாடும் அணியாகும். ஆனால் அதை நிரூபிப்பதற்கு அவர்களிடம் தற்போது உலகக்கோப்பை இல்லை!” என்று கூறி இருக்கிறார்!