518 ரன்ஸ்.. ஹெட் பிரம்மாண்ட சாதனை.. கேப்டன் ஸ்மித் அசத்தல் சதம்.. இங்கிலாந்தை ஆஸி அணி புரட்டி எடுத்தது

0
139
Head

தற்போது ஆசஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி விட்டது. நான்காவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்று இருந்த நிலையில், நேற்று முன் தினம் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கியது.

- Advertisement -

ஜோ ரூட் அபார சதம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணிக்கு முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 160 ரன் ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 385 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் மைக்கேல் நேசர் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு நேற்று டிராவிஸ் ஹெட் 91 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து களத்தில் நின்றார். இன்று மீண்டும் விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட்டில் அதிரடி தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்தார்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் சாதனை

மேலும் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 166 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் குவித்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார். அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 183 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து இருக்கிறார். இவருடன் இணைந்து பியூ வெப்ஸ்டர் 42 ரன்கள் எடுத்திருக்கிறார். மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து இருக்கிறது. மேலும் 134 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க : சூர்யா யாரையும் விட நீங்கதான் பெஸ்ட்.. நான் சொல்ற இத மட்டும் செய்யுங்க.. ரன் தானா வரும் – பிக்கி பாண்டிங் அறிவுரை

இந்த ஆசஸ் டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளில் டிராவிஸ் ஹெட் 3 சதங்கள் உடன் மொத்தம் 600 ரன்கள் குவித்திருக்கிறார். ஒரு ஆசஸ் டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரராக அதிக சதங்கள் குவித்தவர்களின் எலைட் பட்டியலில் மேத்தியூ ஹைடன், அலைஸ்டர் குக் வரிசையில் டிராவிஸ் ஹெட் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -