ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நாளை இந்திய அணிக்கு எதிராக முதல் அரையறுதி ஆட்டத்தில் விளையாட இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி மிக தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா போட்டி
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 6 முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று தங்கள் திறமையை நிரூபித்தது. மேலும் அதற்கு பின்னர் நடைபெற வேண்டி இருந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டம், மழையால் கைவிடப்பட மூன்றாவது போட்டியான ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெறும் தருணத்தில் இருந்த போது மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணியால் விளையாட முடியாமல் போனது.
இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய அணிக்கு எதிராக அரை இறுதியில் விளையாட ஆஸ்திரேலியா அணி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதை உணர்ந்த கேப்டன் ஸ்மித், வருண் சக்கரவர்த்தி மட்டும் பிரச்சினையாக இருக்க மாட்டார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு எங்களுக்கு மொத்த சவாலாக இருக்கும் என்று சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி பிரச்சனை அல்ல
இதுகுறித்து ஸ்மித் விரிவாக கூறும்போது “இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மட்டுமல்ல, சுழற்பந்து வீச்சு துறையே சவாலாக இருக்கும். எனவே எங்களைப் பொறுத்தவரை இந்த சுழற்சியை நாங்கள் எப்படி எதிர்கொண்டு விளையாடுகிறோம், குறிப்பாக மிடில் ஓவர்களில் இந்திய சுழற் பந்துவீச்சை நாங்கள் எப்படி சமாளித்து விளையாடுகிறோம் என்பதை பொறுத்து எங்களின் வெற்றி தோல்வி அமைந்திருக்கிறது. இது நிச்சயம் ஒரு சவாலாக இருக்கும்.
இதையும் படிங்க:கோலிக்கு எதிரா அவர் ரெடியா இருப்பார்.. அவரோட இந்த பலவீனத்தை ஆஸி அணி குறி வைக்கும் – அம்பாத்தி ராயுடு பேட்டி
எனவே இந்த விஷயங்களை புரிந்து கொள்வதன் மூலமாக சில திருப்பங்கள் ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இறுதியில் நாங்கள் யூகித்தது சரிதான். துபாய் ஆடுகளத்தில் தங்கி இரண்டு நாட்கள் போட்டிக்கு தயாராக வேண்டும் என்று கணித்தது சரியான முடிவு. ஒருவேளை நியூசிலாந்து அணிக்கு எதிராக ரிசல்ட் வரும் என்று காத்திருந்து அதற்குப் பின்னர் நாங்கள் மைதானத்திற்கு வருவது, நாங்கள் சரியான முறையில் தயாராவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காது” என்று ஸ்மித் கூறியிருக்கிறார்.