இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியின் தோல்வி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா வீரர்கள் தயாராகும் நிலையில் முக்கிய வீரர்கள் அதற்கு முன்னர் நடைபெற்ற சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தனர். இருப்பினும் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு ஆஸ்திரேலியா வந்தது.
இந்த நிலையில் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி தோல்வியும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றது. இந்த சூழ்நிலையில் விளையாட்டில் வெற்றி தோல்வி ஏற்படுவது சாதாரணம் எனவும் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவதை இப்போது முக்கியம் என்று சில முக்கிய கருத்துகளை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “இல்லவே இல்லை, பலமுறை பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களான எங்களை இறுக்கமான சூழ்நிலைகளில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். நாங்களும் அதையே செய்திருக்கிறோம். எனவே இது இறுக்கமான நேரமாக இருக்கிறது. ஒருவேளை நாங்கள் விளையாடிய அணிகளில் இது இறுக்கமான ஒன்றாக இருந்திருக்கலாம். நாங்கள் ஒன்றாக இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை ரசித்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக குழுவில் பலவற்றை அனுபவித்து வருகிறோம்.
இதையும் படிங்க:ராஜஸ்தான் வாங்கிய 13 வயது வீரர்.. ஐபிஎல் வரலாற்றில் அதிசயம்.. யார் இந்த வைபவ் சூர்யவன்சி?
இதனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை நன்றாக பழகி வருகிறோம். தற்போது கோடை காலம் சிறப்பாக தொடங்கப்படவில்லை. ஒரு பெரிய தோல்விக்குப் பிறகு அறையில் உட்கார்வது வலிக்கிறது. இருப்பினும் இது போன்ற சூழ்நிலைகளை முன்னரே அனுபவித்திருக்கிறோம். ஆனால் இது ஒரு தொழில் முறை விளையாட்டின் இயல்பு. எனவே இப்போது அடுத்த போட்டிக்கு கவனத்தை செலுத்துவதே மிகவும் முக்கியமான ஒன்றாகும்” என்று கம்மின்ஸ் கூறி இருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற இருக்கிறது. இது ஆஸ்திரேலியா அணிக்கு சற்று சாதகமாக இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.