இந்திய கிரிக்கெட்

இவரோட விக்கெட் தான் எங்களுக்கு திருப்பு முனை.. அதுக்கு ஐடியா தந்ததுக்கு அவருக்கு நன்றி – பேட் கம்மின்ஸ் பேச்சு

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் வெற்றி பெற்று தற்போது தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றிக்கான காரணங்கள் குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. பிறகு போட்டியை மிக எளிதாக டிரா செய்து விடக் கூடிய வாய்ப்பிலும் இருந்தது. இப்படி கையில் இருந்த போட்டியை இந்திய அணி தோற்று ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய முன்னிலையை தொடரில் இப்பொழுது கொடுத்து இருக்கிறது.

எனக்கு அவர் உதவினார்

இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது “இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. இங்கு அற்புதமான ஒரு கூட்டம் வந்திருந்தது. இப்படி ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு வீரராக பங்கு எடுத்திருப்பது சிறப்பானது. இப்பொழுது எங்களது ட்ரெஸ்ஸிங் ரூம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த பொழுது எனக்கு மார்னஸ் லபுசென் நல்ல முறையில் உதவினார்”

“மேலும் முதல் இன்னிங்ஸில் நாங்கள் 400 ரன்கள் எடுக்க ஸ்மித் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பானது. மேலும் இந்தியா இப்பொழுது பேட்டிங் செய்த பொழுது முதல் செசனில் 30 ரன்னுக்கு மூன்று விக்கெட் இழந்து இருந்தார்கள். இதற்கு அடுத்து இரண்டாவது செஷனில் அருமையாக மீண்டு வந்தார்கள். ஆனாலும் இங்கு எதுவும் நடக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்”

- Advertisement -

ஹெட் பந்து வீசியது அவர் தந்த ஐடியா

“தேனீர் இடைவேளைக்கு பிறகு ஹெட் வந்து பந்து வீசியது எங்கள் அணியின் பயிற்சியாளர் கொடுத்த ஐடியா. இதற்கான முழு பெருமையும் அவருக்கே போய் சேரும். ஹெட் கைப்பற்றிய ரிஷப் பண்ட் விக்கெட்தான் ஆட்டத்தில் எங்களுக்கு பெரிய திருப்புமுனையாக மாறியது. நாங்கள் அங்கிருந்து போட்டிக்குள் நேராக வந்து விட்டோம்”

இதையும் படிங்க : ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. தோல்விக்கு முக்கிய காரணம் பும்ராவுக்கு நடந்த அதுதான் – ரோகித் சர்மா விளக்கம்

“முதல் இன்னிங்ஸில் ஸ்மித் விளையாடிய விதம் மிகவும் அற்புதமானது. இது எளிதாக பேட்டிங் செய்யக்கூடிய விக்கெட் கிடையாது. மேலும் அவர் டெய்ல் எண்டர்களை வைத்துக்கொண்டு பேட்டிங் செய்த விதம் அபாரமானது. அத்துடன் அவர் இந்த போட்டியில் சில சிறப்பான கேட்ச் பிடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த வெற்றியில் அவருடைய பங்களிப்பு மிகப்பெரியதாக இருந்தது. நாங்கள் கிட்னி செல்வதற்கு முன்பாக இந்த வெற்றியை அனுபவிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Pat Cummins

Recent Posts