இப்ப எங்களுக்கு பெரிய சவால் இந்த இந்திய வீரர் தான்.. மொத்த டீமுக்குமே டோன் செட் பண்ணுவாரு – மிட்சல் மார்ஸ் பேட்டி

0
383
Marsh

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எந்த இந்திய வீரர் சவால் தரக்கூடியவராக இருப்பார் என ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் கூறியிருக்கிறார்.

இரு அணிகளுக்கும் இடையே முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை காண்பராக மைதானத்தில் மதியம் 1:45 மணிக்கு இந்திய நேரப்படி நடக்க இருக்கிறது.

- Advertisement -

இவர்தான் பெரிய சவால்

முதல் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது ” அபிஷேக் ஷர்மா இந்திய அணிக்கு என்ன தேவையோ அந்த வகையில் மிகச் சரியாக விளையாடுகிறார். இந்திய அணிக்கு அவர்தான் டோனை அமைக்கிறார். சில காலமாக அவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறப்பாக விளையாடிக் கொண்டு வருகிறார். அவர் எங்களுக்கு நல்ல சவாலை வழங்குவார். உலகின் சிறந்த வீரர்களால் சவால் செய்யப்படுவதை நீங்கள் விரும்புவீர்கள். அவர் அப்படிப்பட்டவர் என்று எங்களுக்கு தெரியும்”

“மற்ற ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் போலவே நானும் அணியின் வெற்றிக்கு பங்களிக்கவே விரும்புகிறேன். நான் பேட்டிங் செய்யும்பொழுது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே யோசிக்கிறேன். கேப்டனாக நான் யோசிப்பது கிடையாது”

- Advertisement -

இனி இப்படித்தான் இருக்கும்

“நான் ஹெட் அல்லது யாருடன் விளையாடினாலும் நல்ல துவக்கத்தை கொடுக்க விரும்புகிறேன். அது என்னுடைய கடமை. எனவே இது தொடரும் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க : 8 விக்கெட்.. என்னை எல்லாரும் வில்லன் ஆக்கிட்டிங்க.. அகர்கருக்கு ஷமி வேற லெவல் பதில்

“எங்களுடைய வெள்ளைப் பந்து அணிக்கு ஆட்கள் உள்ளே வெளியே என வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு அட்டவணை எவ்வளவு பரபரப்பாக இருக்கிறது என்பதை வைத்து பார்க்கும் பொழுது, வெள்ளை பந்து கிரிக்கெட்டின் இயல்பாக இதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -