AUSvsNZ.. 3 பந்து 12ரன்..10 பந்தில் ஆட்டத்தை மாற்றிய மும்பை டிம் டேவிட்.. சிஎஸ்கே ஜோடி ஆட்டம் வீண்

0
279
David

ஆஸ்திரேலியா அணி தற்பொழுது நியூசிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

மூன்று போட்டிகள் டி20 தொடரின் முதல் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டார்சில் வெற்றி பெற்ற நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சாண்ட்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் வழக்கம் போல் அதிரடியாக துவங்கி, 17 பந்தில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் கான்வோ மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

கான்வோ 46 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 63 ரன், ரச்சின் ரவீந்தரா 35 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்து நல்ல நிலைக்கு நியூசிலாந்து அணியைக் கொண்டு வந்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கடுத்து கிளன் பிலிப்ஸ் 10 பந்தில் 19 ரன், சாப்மேன் 13 பந்தில் 18 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 15 பந்தில் 24 ரன், டேவிட் வார்னர் 20 பந்தில் 32 ரன், மேக்ஸ்வெல் அதிரடியாக 11 பந்தில் 22 ரன், ஜோஸ் இங்லீஷ் 20 பந்துக்கு 20 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

கேப்டன் மிட்சல் மார்ஸ் அரைசதம் கடந்து களத்தில் நின்றார். அவருடன் டிம் டேவிட் ஃபினிஷராக உள்ளே வந்தார். இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.

ஆடம் மில்னே வீசிய 19ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்களை டிம் டேவிட் அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 19 ரன்கள் வந்தது. இதற்கு அடுத்து டிம் சவுதி வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 16 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

இந்த நிலையில் முதல் மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் கிடைத்த நிலையில், கடைசி மூன்று பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் நின்ற டிம் டேவிட் 6, 2, 4 என்று வரிசையாக அடித்து 12 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா அணியை திரில் வெற்றி பெற வைத்தார்.

ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் மிட்சல் மார்ஸ் 44 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 72 ரன்கள், டிம் டேவிட் 10 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 30 ரன்கள் எடுத்தும் களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். மார்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.