203/2 டு 309/10.. பவுலிங்கில் கலக்கிய ஹெட்.. தொடரை கோட்டை விட்ட இங்கிலாந்து.. ஆஸி அபார வெற்றி

0
187
Brook

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. சிறப்பான நிலையில் இருந்து டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சரிந்து தோற்றது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியா இரண்டு மற்றும் இங்கிலாந்து இரண்டு என வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இன்று தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

- Advertisement -

ஹெட் பந்துவீச்சில் சரிந்த இங்கிலாந்து அணி

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 27 பந்தில் 45 ரன்கள், பென் டக்கெட் 91 பந்தில் 107 ரன்கள், கேப்டன் ஹாரி புரூக் 52 பந்தில் 72 ரன்கள் எடுத்தார்கள்.

ஒரு கட்டத்தில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 24 ஓவர்களில் 200 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தது. அதற்குப் பிறகு வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் நான்கு விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்து அணியை சரித்தார்.

- Advertisement -

தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 30 பந்தில் 58 ரன்கள், டிராவிஸ் ஹெட் 26 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து ஸ்மித் 48 பந்தில் 36 ரன்கள், ஜோஸ் இங்கிலீஷ் 20 பந்தில் 28 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்திருந்தார்கள்.

இதையும் படிங்க : இன்னும் 2 நாள்.. ஆனாலும் இந்திய அணி ஜெயிக்கலாம்.. ரோகித் முடிவால் கிடைத்த ஒரு வாய்ப்பு.. 2வது டெஸ்ட்

ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 20.4 ஓவரில் 165 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. மேற்கொண்டு மழை நிற்காமல் பெய்த காரணத்தினால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 எனக்கு கைப்பற்றியது.

- Advertisement -