“ஆஸி டி20 சீரிஸ்.. இந்த 3 இந்திய வீரர்களுக்கு தலையெழுத்து மாதிரி..!” – முன்னாள் வீரர் வெளியிட்ட பரபரப்பான தகவல்!

0
626
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை முடிவடைந்து நான்காவது நாளான இன்று இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட அணிக்கு சூரிய குமார் யாதவ் கேப்டன் ஆகவும் ருதுராஜ் துணை கேப்டன் ஆகவும் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இங்கிருந்து டி20 உலக கோப்பைக்கு ஒரு வலிமையான அணியை உருவாக்குவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சிந்திக்கிறது.

மேலும் அடுத்து நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய மூத்த வீரர்களான ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்பதாக தெரிகிறது. எனவே புதிய அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இருக்கிறது.

மேலும் தற்பொழுது இந்திய டி20 அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக யார் இருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. கில், ருத்ராஜ், ஜெய்ஸ்வால், இஷான் கிஷான் என நான்கு பேர் இருக்கிறார்கள். எனவே இதிலிருந்து இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டியது முக்கியமாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “அடுத்து நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட வேண்டும். அடுத்த உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணியிடம் 25 டி20 போட்டிகள் இல்லை. எனவே நடக்க இருக்கும் இந்தத் தொடரை அதிகம் பயன்படுத்த வேண்டிய வாய்ப்பு இருக்கிறது. இதைக் கொண்டு பலப்படுத்த வேண்டும் இல்லை என்றால் பின்பு வருத்தப்பட வேண்டி இருக்கும்.

இந்த வகையில் இந்த தொடரை பார்த்தால் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ், இசான் கிசான், ஜெய்ஸ்வால் மூன்று பேர் இருக்கிறார்கள். இவர்களில் யார் தொடங்குவார்கள் என்கின்ற பெரிய கேள்வி இருக்கிறது. இது யாருக்காவது பெரிய வாய்ப்பாகவும் யாருக்காவது சோகமான முடிவாகவும் அமையப் போகிறது.

ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடுகின்ற காரணத்தினால் அவரை விடக்கூடாது என்று நாம் நினைப்போம். அவர் விளையாட வேண்டும் என்றால் இஷான் கிஷான் விளையாட முடியாது.

அதே சமயத்தில் ருத்ராஜ் இந்திய அணியின் துணை கேப்டன். நிச்சயமாக அவரை வெளியில் வைக்க முடியாது. இப்படி இருக்கும் பொழுது யாரை வெளியே விடுவது. இவர்களுக்கு அடுத்து சூரியகுமார், திலக் வர்மா, சிவம் துபே என நல்ல வீரர்கள் இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!