எனக்கு அந்த ஒரு இந்திய வீரர்தான் முக்கியம்.. அவர் கூட ஆடறது பெரிய பாக்கியம் – ஆஸி நாதன் லயன் பேட்டி

0
30
Lyon

இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்கிறது. இதில் ஒரு இந்திய வீரரை மிகவும் எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் கூறியிருக்கிறார்.

நாதன் லயன் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆசஸ் தொடரில் நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடியதுடன் 500வது டெஸ்ட் விக்கெட்டையும் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா கண்டிஷனில் கூட அவருடைய சுழல் பந்துவீச்சு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்து வந்திருக்கிறது.

- Advertisement -

ஸ்டார்க் பாதையில் நாதன் லயன்

இடதுகை ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் பந்து வீசும் பக்கத்தில் அவருடைய கால் தடங்கள் நிறைய பதியும். இதன் காரணமாக அங்கு ஆடுகளத்தில் சேதாரம் உருவாகும். இதை பயன்படுத்தி டெஸ்ட் போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் ஆப் ஸ்பின்னரான நாதன் லயன் பெரிய விக்கெட் வேட்டையை நடத்துவார். இந்த ஜோடி இந்த வகையில் உலகப்பிரசித்தம் பெற்றது.

அதே சமயத்தில் நாதன் லயன் பல நாட்டு வீரர்களுடன் சேர்ந்து விஷயங்களை பகிர்ந்து கொள்வதை விரும்பக் கூடியவராக இருந்திருக்கிறார். மேலும் எந்த வீரரிடமும் கற்றுக் கொள்ள தான் தயாராக இருப்பதாக கூறக்கூடியவர். நிறைய வீரர்களுடன் பழகும் பொழுது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிவது நல்லது என்று சமீபத்தில் கூறி ரவிச்சந்திரன் அஸ்வினுடன் பேச விருப்பப்பட்டிருந்தார்.

- Advertisement -

அஸ்வின் உடன் விளையாடுவது பாக்கியம்

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி பேசி இருக்கும் நாதன் லயன் கூறும் பொழுது “நானும் ரவிச்சந்திரன் அஸ்வினும் இதே காலகட்டங்களில் அறிமுகமான. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பல தொடர்களில் போட்டியிட்டு இருக்கிறோம். எனக்கும் இடையில் எப்பொழுதும் மரியாதை இருந்து வந்திருக்கிறது. அவர் பந்து வீசுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் ஆப் ஸ்பின் பந்துவீச்சில் முழுமையானவர் கைதேர்ந்தவர். அவருக்கு எதிராக விளையாடுவதும், அவரிடம் கற்றுக் கொள்வதும் என்னுடைய பாக்கியம்.

இதையும் படிங்க : 4 பேர்.. அதுல 4வது இடம்தான் விராட் கோலிக்கு தருவேன்.. ஆதாரம் இருக்கு – ஸ்டார்க் மனைவி பேட்டி

என் வாழ்க்கையில் நான் எப்பொழுதும் சிறந்தவர்களுக்கு எதிராக போட்டியிட விரும்புகிறேன். நீங்கள் மொத்த இந்திய அணியின் முழு வரிசையையும் பாருங்கள், எல்லா இடங்களிலும் சூப்பர் ஸ்டார்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுடன் போட்டியிடவே விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -