இந்திய கிரிக்கெட்

நிச்சயம் பும்ரா எங்களை விட மாட்டார்.. கண்டிப்பா இது நடக்கும்.. காரணம் இதான் – வெப்ஸ்டர் கருத்து

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாளை பும்ரா பந்துவீச்சில் பெரிய அச்சுறுத்தலாக திரும்பி வருவார் என ஆஸ்திரேலியா அணிக்கு ஐந்தாவது டெஸ்டில் அறிமுகமாகி இருக்கும் வெப்ஸ்டர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவின் புதிய வியூகம்

வழக்கமாக ஆஸ்திரேலியாவில் சிட்னி மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு மற்ற மைதானங்களை விட கொஞ்சம் அதிகம் ஒத்துழைக்கும். மேலும் ஆடுகளம் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். இந்த முறை அப்படியே மாற்றி பச்சையாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

இதன் மூலமாக இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை ஆட்டத்தில் இருந்து எடுப்பது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவின் வலிமையான வேகப் பந்து வீச்சு தாக்குதலை வைத்து, இந்தியாவின் பலவீனமான பேட்டிங் யூனிட்டை தாக்குவது அவர்களுடைய திட்டமாக இருக்கிறது. இன்று சிட்னி ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக வேகப்பந்து வீச்சுக்கு முற்றிலும் ஆதரவாக காணப்பட்டது. இது ஆஸ்திரேலியா அணிக்கும் பிரச்சனையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வீண் வம்பு இழுத்த கான்ஸ்டாஸ்

இன்றைய நாளின் கடைசி ஓவரில் பும்ரா பந்து வீச கவாஜா பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, ஆஸ்திரேலியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் தேவையில்லாமல் வம்புக்கு சென்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது பந்தில் கவாஜாவை பும்ரா வெளியேற்றினார். எனவே நாளை பும்ரா பந்துவீச்சு எப்படி இருக்கும்? என எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு எங்ககிட்ட இந்த திட்டம் இருக்கு.. அவர் இந்த தப்பதான் செய்யறாரு – ஸ்காட் போலண்ட் விளக்கம்

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் பியூ வெப்ஸ்டர் கூறும் பொழுது “நிச்சயமாக இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்வதற்கு என ஒரு முறை இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் பும்ரா மிகவும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் எங்களுடைய மொத்த பேட்டிங் யூனிட்டுக்கும் சவால் விடுவார் என்பதில் சந்தேகம் கிடையாது. அவர் தன்னுடைய லைன் மற்றும் லென்த்தில் அற்புதமானவர். இந்த விக்கெட்டில் நிச்சயம் அவருக்கு சாதகம் கிடைக்கும். அவர் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts