முஷீர் கானை விடுங்க.. விராட் தன் சொந்த பையன் கூட ஆடினாலும் ஸ்லெட்ஜிங் பண்ணுவாரு – அதுல் வாசன் பேட்டி

0
240
Wassan

விராட் கோலி தன் சொந்த குழந்தைக்கு எதிராக விளையாடினாலும் கூட ஆக்ரோஷமாகவே விளையாடுவார், அதுதான் அவருடைய குணம் அதை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என இந்திய முன்னாள் வீரர் அதுல் வாசன் தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் தகுதி சுற்றில் பஞ்சாப் பணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் இளம் அறிமுக வீரர் முஷீர் கானை ” இப்பொழுதுதான் தண்ணீர் கொண்டு வந்தான்; ஆனால் உடனே பேட்டிங் செய்ய வந்திருக்கிறான்” எனது விராட் கோலி களத்தில் நகைச்சுவையாக செய்தது பெரிய பேசும் பொருளாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சொந்தக் குழந்தைக்கும் அதேதான்

இந்த நிலையில் சில விராட் கோலியின் இந்த செயலை விமர்சனம் செய்து வருகிறார்கள். இளம் இந்திய சிறுவனின் மனநிலையை உடைக்கும் விதத்தில் விராட் கோலி செயல்பட்டதாகவும், பெரிய வீரரான விராட் கோலி ஒரு இளம் சிறுவனிடம் இப்படி எல்லாம் செய்திருக்கக் கூடாது என பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து அதுல் வாசன் கூறும் பொழுது “விராட் கோலி போட்டிக் குணம் கொண்டவர். அவர் தன் சொந்த குழந்தைக்கு எதிராக விளையாடினாலும் கூட வெற்றி பெறவே விரும்புவார். அதைப் பற்றி நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் விளையாட்டை விளையாடும் பொழுது மற்றவர்களுடன் உங்களை சமமாக கருதிக் கொள்ளுங்கள். ஒரு அங்குலம் கூட யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டு தராதீர்கள்”

- Advertisement -

ஸ்லெட்ஜிங் என்பது இதுதான்

” உங்களால் சரியாக டைமிங் செய்ய முடியாவிட்டால், நீங்கள் குற்றத்தை செய்யாதீர்கள். உங்களை யாராவது வரம்புக்குள் இருந்து வம்பு இழுப்பது என்பது கிரிக்கெட்டில் எப்பொழுதும் சாதாரண ஒரு விஷயம்தான். ஸ்லெட்ஜிங் என்பது கிண்டல் நகைச்சுவை மற்றும் அருவெறுப்பு ஆகியவற்றின் கலவை”

இதையும் படிங்க : விராட் ஓய்வுக்கு காரணம் இவர்தான்.. இந்த 2 பேர் ஆடினா மட்டும்தான் இந்தியா ஜெயிக்கும் – பனேசர் கருத்து

“நிச்சயமாக விளையாட்டில் உடல் ரீதியான மோதல்கள் இருக்கக் கூடாது. அதே சமயத்தில் சில சிக்னல்கள் தவறாக புரிந்து கொள்ளப்படவும் கூடாது. இது முற்றிலும் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் போட்டி அதிகாரிகள் இருக்கிறார்கள். வீரர்கள் தங்களை வரம்புக்குள் வெளிப்படுத்திக் கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -