பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது வழக்கமான அதிரடி பேட்டிங் மூலம் முதல் இன்னிங்ஸில் பதிலடி கொடுத்திருக்கிறது. ஜோ ரூட், ஹாரி புரூக் அபார சதம் அடித்திருக்கிறார்கள்.
இங்கிலாந்து தற்போது பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. தற்போது முல்தான் மைதானத்தில் முதல் போட்டி நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் தரப்பில் வந்த மூன்று சதங்கள்
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 101, கேப்டன் ஷான் மசூத் 151, ஆகா சல்மான் 109 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தது இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் மூன்று விக்கெட் கைப்பற்றினால்.
நேற்று இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 இடங்கள் எடுத்து இருந்தது. இந்த போட்டியில் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விளையாடாததால் கேப்டன் பொறுப்பேற்றிருந்த ஒல்லி போப் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இருந்தார்.
அதிரடியில் கலக்கிய இங்கிலாந்து அணி
இன்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி 85 பந்துகளில் 78 ரன்கள், பென் டக்கெட் 75 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் மற்றும் ஹாரி குரூக் இருவரும் ஜோடி சேர்த்தார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்ததோடு 200 ரன் பார்ட்னர்ஷிப்பையும் தாண்டினார்கள்.
இன்று மூன்றாவது ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் வைத்திருக்கிறது. பாகிஸ்தானை விட வெறும் 62 ரன்கள் மட்டுமே பின்தங்கி இருக்கிறது. ஜோ ரூட் 277பந்துகளில் 176 ரன்கள், ஹாரி புரூக் 173 பந்துகளில் 141 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : ரூட்டால சமாளிக்க முடியாத ஒரே ஆள் பும்ராதான்.. ஆனா இப்பவே அவர் அந்த வேலையை ஆரம்பிச்சிருப்பார் – மைக்கேல் வாகன் கருத்து
மேலும் இவர்கள் இருவரும் இணைந்து 310 பந்துகளில் 243 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது பதிவாகி இருக்கிறது. மேலும் நான்காவது விக்கெட்டுக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான சிறப்பான பார்ட்னர்ஷிப் ஆகவும் பதிவாகி இருக்கிறது.