தற்போது தமிழ்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் புச்சி பாபு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் தமிழ்நாடு அணி மும்பை அணிக்கு எதிராக பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தியிருக்கிறது.
நேற்று துவங்கிய மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் முதலில் பேக்கிங் செய்த தமிழ்நாடு அணி முதல்நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. இந்த தொடரில் அனைத்து போட்டிகளும் நான்கு நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாள் மேஜிக்
இன்று இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 117.3 ஓவர்களில் 379 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. தமிழக அணியில் அதிகபட்சமாக பூபதி குமார் 84 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் 65, பாபா இந்திரஜித் 61 ரன்கள், இறுதிக்கட்டத்தில் ஆல்ரவுண்டர் அஜித் ராம் அதிரடியாக 69 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஹிம்மன்சு சிங் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் மும்பை அணியில் கேப்டனாக சர்பராஸ் கான் இருக்க, சூரியகுமார் யாதவ் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நட்சத்திர வீரர்கள் இருந்தார்கள். மேலும் சர்பராஸ் கானின் தம்பி முசிர் கான் இடம் பெற்று இருந்தால். எனவே மும்பை பேட்டிங் குறித்த எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களுக்கு இருந்தது.
பந்துவீச்சில் கலக்கிய தமிழக அணி
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த முசிர் கான் 16 ரன், திவ்யனஸ் சக்சேனா 61 ரன் எடுத்து வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்னிலும் சூரியகுமார் யாதவ் 30 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். அனுபவ வீரர் சாம்ஸ் முலானி ரன் ஏதும் எடுக்கவில்லை.
இதையும் படிங்க : ரோகித் விராட் வேண்டாம்.. இந்த இந்திய பேட்ஸ்மேன் ஆஸி அணிக்கு வேணும் – ஸ்டீவ் ஸ்மித் விருப்பம்
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் கேப்டன் சர்பராஸ் கான் இதுவரையில் பேட்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு ஏதோ காயம் போல தெரிகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல நட்சத்திர வீரர்கள் இருந்த மும்பை அணிக்கு எதிராக தமிழக அணி பேட்டிங் பவுலிங் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. பந்துவீச்சில் சாய் கிஷோர் 3, அஜித் ராம் 2 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.