ரோகித் விராட் வேண்டாம்.. இந்த இந்திய பேட்ஸ்மேன் ஆஸி அணிக்கு வேணும் – ஸ்டீவ் ஸ்மித் விருப்பம்

0
1178
Smith

ஆஸ்திரேலியா அணி வீரர்களிடம் ஒரு இந்திய வீரரை தேர்ந்தெடுக்க முடிந்தால் எந்த வீரர்களை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதில் பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்ட ஒரு இந்திய வீரரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

மேலும் தற்போது மிகச்சிறந்த வீரர்களாக இந்திய கிரிக்கெட்டில் இருக்கக்கூடிய ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியவரை பல ஆஸ்திரேலியா வீரர்கள் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் மூன்று முகம்

தற்போது இந்திய கிரிக்கெட்டின் மூன்று முகமாக விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா மூவரும் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்து டி20 கிரிக்கெட்டில் இந்த தலைமுறையில் மிகச் சிறந்த வீரராக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் இருக்கிறார்.

இவர்களுக்கு அடுத்த படியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிகப்படியான விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் உலகில் யாருக்கும் இல்லாத சிறப்பான அப்ரைட் சீம் கொண்ட வேகப்பந்துவீச்சாளராக முகமது சமி இருக்கிறார். இப்படி இருந்த பொழுதும் ஆஸ்திரேலியா வீரர்களில் பெரும்பாலானவர்கள் இவர்களில் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை.

- Advertisement -

ஆஸ்திரேலியா வீரர்களின் விருப்பம்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஒரு இந்திய வீரரை தேர்ந்தெடுக்க முடிந்தால் எந்த இந்திய வீரரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு முதலில் ஸ்டீவ் ஸ்மித் பதிலளிக்கும் பொழுது “அது சச்சின் டெண்டுல்கர். அவர் ஒரு முழுமையான ப்ரீக்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : நான் கேரண்டி.. இதனால 2026 டி20 உலக கோப்பையிலும்.. அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அணி தோற்கும் – முகமது ஆசிப் விமர்சனம்

ஆஸ்திரேலியா வீரர்கள் மார்னஸ் லபுசேன், மிட்சல் ஸ்டார்க் மற்றும் உஸ்மான் கவஜா போன்ற வீரர்களிடம் மட்டுமில்லாமல் இன்னும் சில வீரர்களிடம் இதே கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது அவர்களின் பெரும்பாலானவர்கள் சச்சின் டெண்டுல்கரையே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -