8 இன்னிங்ஸ் சோகம்.. காப்பாற்றிய ரோகித் சர்மா.. அறிமுக வீரர்களுக்கு காத்திருக்கும் சோதனை

0
487
Rohit

தற்பொழுது இந்தியாவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே வருகிறது.

பொதுவாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என இந்திய ஆடுகளங்கள் பற்றிய கணிப்பு இருக்கும், ஆனால் இந்த முறை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

மூன்றாவது போட்டி நடந்து கொண்டிருக்கும் ராஜ்கோட் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமானது, எனவே போட்டி டிராவில் முடிந்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் இந்த ஆடுகளமும் வேகத்திலும் பவுன்சிலும் மாறுபாடுகள் கொண்டதாக பேட்டிங் செய்ய கடினமாக இருக்கிறது.

இந்த நிலையில் போட்டியில் டாஸ் வென்று இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் முதல் இன்னிங்ஸில் நிறைய ரன்கள் குவிக்கும் நோக்கத்தில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாடம் கற்ற இங்கிலாந்து இந்த முறை இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக ஆண்டர்சன் உடன் மார்க் வுட்டை உள்ளே கொண்டு வந்தது.

- Advertisement -

இதற்கு கைமேல் பலனாக ஜெய்ஸ்வால் விக்கெட்டை 10 ரன்களில் மார்க் வுட் பறித்தார். அடுத்து வந்த கில் 8 பந்துகளில் தடுமாறி, 9வது பந்தில் மார்க் வுட் இடம் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஆடுகளத்தில் இரட்டை வேகம் இருந்தது. இதனால் பந்து வேகமாக வரும் என்று எதிர்பார்த்து அடிக்கப்போன ரஜத் பட்டி தார் ஏமாந்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை 33 ரன்களில் இழந்து நெருக்கடிக்கு உள்ளானது.

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்த முறை ஐந்தாவது வீரராக களத்திற்கு வந்தார். ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா கூட்டணி மிகவும் பொறுப்புடன் விளையாடி முதல் சீசன் முடிவில் இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறது.

கடந்த எட்டு இன்னிங்ஸ்களாக அரை சதம் எதுவும் அடிக்காத இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இந்த டெஸ்ட் போட்டியில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து 74 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இவருடன் ரவீந்திர ஜடேஜா 44 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.

இதையும் படிங்க : 33/3.. மீண்டும் சொதப்பிய கில்.. சிறப்பான வலை விரித்த ஆண்டர்சன் மார்க் வுட்.. ரசிகர்கள் கோபம்

முதல் செசனில் இங்கிலாந்து 5 ஓவர்கள் குறைவாக வீசி இருக்கிறது. இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 93 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து மதிய உணவு இடைவேளைக்கு சென்று இருக்கிறது. இப்போதைக்கு ரோஹித் சர்மா ஓரளவு இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார். மேற்கொண்டு அடுத்த செசன் விளையாடுவதை பொருத்துதான் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கை ஓங்கும் இல்லை இறங்கும்!