“அஸ்வினுக்கு இன்னும் உ.கோ வாய்ப்பு இருக்கு.. நான் போன்ல பேசிட்டுதான் இருக்கேன்!” – ரோகித் சர்மா சொன்ன இனிப்பான செய்தி!

0
2158

இந்திய அணி நேற்று ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டி, 6.1 ஓவரில் ஷேர் செய்து, வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கு முந்தைய போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அக்சர் பாடேல் காயம் அடைந்திருந்தார். அவருக்கு பதிலாக வலதுகை சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு, இன்றைய ஆடும் அணியிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்தியாவில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்ட அந்த அணியில் சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக வருகிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் இருவரும் இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் என்பதால், ஒரே வகையான பந்துவீச்சு வகைமையைத் தருகிறார்கள்.

- Advertisement -

எனவே தற்போதைய இந்திய அணியில் வலதுகை விரல் சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் கூட கிடையாது. இது உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.

தற்பொழுது அக்சர் இடத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் வாஷிங்டன் சுந்தர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு தேர்வாக வாய்ப்பு இருக்கிறதா? என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் வலதுகை விரல் சுழற் பந்துவீச்சாளர்களில் உலகில் தலை சிறந்தவரான ரவிச்சந்திரன் அஸ்வின், அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய போட்டி முடிவுக்கு பின் பேசியுள்ள ரோஹித் சர்மா இது குறித்து சில நம்பிக்கையான சூசகமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “சுழல் வந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் எல்லோருமே, தற்போது வாய்ப்புக்கான வரிசையில்தான் இருக்கிறார்கள். நேர்மையாக சொல்வது என்றால் நான் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இந்த காரணத்தால் அவரும் இந்திய உலகக்கோப்பை அணிக்கான வாய்ப்பில் வரிசையில் இருக்கிறார். மேலும் வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களும் வரிசையில் இருக்கிறார்கள். பேட் மற்றும் பந்து இரண்டிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர்களை நாங்கள் விரும்புகிறோம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -