ஆசிய கோப்பை.. விராட் கோலி புதிய உலக சாதனை.. தகர்ந்தது சச்சினின் மெகா ரெக்கார்ட்!

0
3430
Virat

இன்று 16வது ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி சச்சினின் உலக சாதனையை தகர்த்து புதிய உலகச்சாதனை படைத்திருக்கிறார்!

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 24.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா, 56 சுப்மன் கில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்திருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் போட்டியின் போது மழை குறுக்கிட்டு நிற்காமல் பெய்த காரணத்தினால், போட்டிக்கு ரிசர்வ் டே இருந்ததால், இன்றைக்கு ஆட்டம் தொடர்ந்தது. விராட் கோலி கேஎல் ராகுலும் இந்திய அணியின் இன்னிங்சை தொடர்ந்து ஆரம்பித்தனர்.

இந்த இன்னிங்ஸில் ஒரு புறத்தில் கேஎல்.ராகுல் மூன்று மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பியது போல் இல்லாமல், மிகச்சிறப்பான ஆட்டத்தை அதிரடியாகவும் அதே நேரத்தில் தகுந்த ஆட்கள் மூலமாகவும் விளையாடினார்.

இன்னொரு முனையில் விளையாடிய விராட் கோலி பெரிய ஆபத்தான ஷாட்கள் எதற்கும் செல்லவில்லை. ஆனாலும் வழக்கம்போல் அவரது பேட்டில் இருந்து ரன்கள் வந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இருவரும் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு அரை சதத்தை கடந்தனர். மேற்கொண்டு மழை இருப்பதின் அபாயத்தை உணர்ந்து, தேவைக்கு அதிகமான ரண்களை திரட்டுவதில் ஆர்வம் காட்டினர்.

மேலும் சிறப்பாக விளையாடி இந்த ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அரைசதம் வந்தது போலவே சதமும் இருவருக்கும் சீக்கிரத்தில் வந்தது. மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்தனர்.

இந்த போட்டியில் அடிக்கப்பட்ட சதம் விராட் கோலிக்கு 47வது ஒருநாள் கிரிக்கெட் சதமாகும். மேலும் இந்தப் போட்டியின் மூலமாக குறைந்த இன்னிங்ஸ்களில் 13,000 ஒருநாள் கிரிக்கெட் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்து இருக்கிறது. விராட் கோலி 122 ரன்கள், கே.எல்ராகுல் 111 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 233 ரன்கள் ஆட்டம் இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது!

ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக்குறைந்த இன்னிங்சில் 13,000 ரன் எட்டிய மூன்று வீரர்கள்.

விராட் கோலி- 267
சச்சின் டெண்டுல்கர் – 321
ரிக்கி பாண்டிங் – 341