ஆசிய கோப்பை இலங்கை அணி அறிவிப்பு.. 4 நட்சத்திர வீரர்கள் ரூல்ட் அவுட்.. ஆசிய சாம்பியனுக்கு நேர்ந்த சோகம்!

0
715
Srilanka

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நாளை முதல் தொடங்க இருக்கிறது. செப்டம்பர் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது!

இந்தத் தொடரில் பங்குபெறும் ஆறு அணிகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாள் அணிகள் தங்களுடைய அணிகளை முன்பே வெளியிட்டு, மேற்கொண்டு தொடரை சந்திப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்!

- Advertisement -

இந்த நிலையில் இந்தத் தொடரை நடத்தும் ஒரு நாடான இலங்கை கோவிட் தொற்றின் காரணமாக ஆசியக் கோப்பைக்கான அணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இலங்கை அணியின் முன்னணி வீரர்களின் காயமும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.

இந்த நிலையில் இன்று ஆசியக் கோப்பைக்கு இலங்கை அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் மொத்தம் 15 வீரர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 17 வீரர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்களின் காயம் இலங்கை அணியை 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்யும்படி வைத்திருக்கிறது.

இந்த அணிக்கு கேப்டனாக தசுன் சனகா தொடர்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றிகரமான வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய மதிஷ பதிரணா இடம்பெற்று இருக்கிறார்.

- Advertisement -

அதேவேளையில் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான துஷ்மந்திர சமீரா மற்றும் லகிரு குமாரா இருவரும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரூல்டு அவுட் ஆகியிருக்கிறார்கள்.

மேலும் லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதோடு பேட்டிங், பந்துவீச்சில் அசத்தி கோப்பையை வென்றதோடு தொடர் நாயகன் இவையும் வென்ற, நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஹசரங்கா தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக விலகி இருக்கிறார்.

தற்போது பயிற்சியில் இளம் இடது கை வேகப் பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்காவும் விலகி இருக்கிறார். இந்த ஆசியக் கோப்பை தொடரில், நடப்பு ஆசிய சாம்பியனான இலங்கை அணிக்கு இது பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆசியக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி :

தசுன் ஷனக (கே), பதும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (து. கே), சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, மதீஷ பத்திரன, கசுன் ராஜிதா, கசுன் ராஜிதன, ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.