ஆசிய கோப்பை.. பாகிஸ்தான் பெயரை இந்திய ஜெர்சியில் அணிந்து விளையாடும் வீரர்கள்.. வெளியான ஆச்சரிய தகவல்.. காரணம் என்ன?

0
989
Asiacup2023

இந்த முறை ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளில் வைத்து நடத்தப்படுகிறது!

பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்டால் இந்தியா பங்கேற்காது என்று திட்டவட்டமாக கூறிய காரணத்தினால், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் மொத்தம் 13 போட்டிகளில் ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது. நான்கு போட்டிகள் மட்டுமே பாகிஸ்தானில் வைத்து நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஆகிய மூன்று அணிகளும், பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் இடம்பெறுகின்றன.

முதல் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் அணிகள் தங்களுக்குள் ஒரு ஆட்டத்தில் மோதிக்கொள்ளும். இதில் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இந்தப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.

- Advertisement -

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடத்தப்படுகின்ற ஆசியக் கோப்பை தொடரில் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே முல்தான் மைதானத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி பல்லேகெலே மைதானத்தில் இலங்கையில் நடக்கிறது.

இந்த ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்தும் உரிமையைப் பெற்று இருப்பதால், எல்லா அணிகளின் வீரர்களின் ஜெர்சியிலும் ஆசிய கோப்பை பாகிஸ்தான் என்ற பெயர் நிச்சயம் இடம்பெற்றாக வேண்டும். இது நடக்குமா என்று கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்பொழுது இந்திய அணி நிர்வாகம் இதற்கெல்லாம் சம்மதித்திருப்பது வரும் விளம்பரங்கள் மூலமாகத் தெரிகிறது. அதில் இந்திய வீரர்கள் அணிந்திருக்கும் ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற எழுத்துக்கள் இருக்கின்றது. இது போட்டியை நடத்தும் நாட்டிற்கான அங்கீகாரம் மட்டுமல்லாமல், விளையாட்டிற்கான ஒற்றுமையையும் குறிப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!