சூர்யகுமார் பற்றி எல்லாம் கவலை இல்ல.. எனக்கு இருக்கிற ஒரே கவலை இது தான்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

0
49

2025 ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான சூர்யகுமார் யாதவ் பார்ம் குறித்து  முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் பட்டேல் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, இன்று துபாயில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

சூர்யகுமார் யாதவ் இதுவரை தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஐந்து இன்னிங்ஸ்களில், அவர் வெறும் 71 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், இதன் சராசரி 23.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 107.57. இருப்பினும், பார்த்திவ் பட்டேல், சூர்யகுமார் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என்று பார்த்தீவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

கவலை இல்லை:

அவர் மிடில் ஆர்டர் குறித்தும் பேசினார்.  அது பெரிய கவலையாக இருக்காது என்றும் கூறினார். தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா 309 ரன்கள் எடுத்திருப்பதைத் தவிர, மற்ற எந்த பேட்ஸ்மேனும் 150 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இது குறித்து பேசிய பார்த்தீவ் பட்டேல், “நமது மனநிலையைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.ஒரு வீரர் செய்யாவிட்டாலும், மற்றொருவர் செய்வார். எங்களிடம் அத்தகைய வீரர்கள் உள்ளனர்.

சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் சிறப்பாக ஆடவில்லை.  ஆனால் இறுதிப்போட்டியில் அவர் சிறப்பாக செயல்படுவார். சஞ்சு சாம்சன் வெவ்வேறு இடங்களில் பேட்டிங் செய்கிறார். கடைசி போட்டியில் அவரும் நன்றாக ஆடினார். ஷிவம் துபே சற்று பங்களித்தார். அக்ஸர் பட்டேல் நன்றாக பேட்டிங் செய்தார். எங்களிடம் எல்லா அம்சங்களும் உள்ளன என்று அவர் பார்த்தீவ் பட்டேல் கூறினார். முந்தைய இலங்கைக்கு எதிரான போட்டியில், திலக் வர்மா 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இந்திய அணியின் குறை:

ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன், 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அக்ஸர் பட்டேல் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவை இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னால் நல்ல அறிகுறிகளாக இருந்தன. இந்த தருணத்தில், பார்த்திவ் பட்டேல், இந்திய அணி மேம்படுத்த வேண்டிய ஒரு அம்சத்தை சுட்டிக்காட்டினார். அவர், கிரவுண்ட் ஃபீல்டிங் கேள்விக்குறியாக உள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க: கெயிலை விட சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக்தான்.. ஆர்சிபில நேரடியா பார்த்தேன் – முகமது கைஃப் பேச்சு

“இலங்கை போட்டிக்கு முன், இந்திய அணி 12 கேட்ச்களை தவறவிட்டது, இது தொடரில் எந்த அணியை விடவும் அதிகம். ஆதிக்கம் செலுத்திய போதிலும், கேட்ச்களை பிடித்திருந்தால் முடிவுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பார்த்திவ் கூறினார். “நமது கிரவுண்ட் ஃபீல்டிங் சற்று கேள்விக்குறியாக உள்ளது. இங்கிலாந்தில் நாம் பல கேட்ச்களை தவறவிட்டோம். இது இந்திய அணி சற்று வேலை செய்ய வேண்டிய ஒரு பகுதி. நாம் இவ்வளவு கேட்ச்களை தவறவிட்ட போதிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளோம். ஆனால் அவற்றை பிடித்திருந்தால், முடிவுகள் பயமுறுத்தும் அளவுக்கு இருந்திருக்கும்.  எந்த அணியும் நம்மை நெருங்கியிருக்க முடியாது. எனவே, இந்திய அணி இதில் நிச்சயமாக வேலை செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

- Advertisement -