உன் மேல தான் என் கண் இருக்கு – அபிஷேக் சர்மாவுக்கு செயலுக்கு யுவராஜ் சிங் பதிவு

0
100
Yuvraj

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் மிகப்பெரிய பேசுபொருளாக அபிஷேக் சர்மாவின் அதிரடி பேட்டிங் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரின் குருவான யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு பதில் அளித்துள்ளது சுவாரசியமானதாக அமைந்திருக்கிறது.

பஞ்சாப் மாநில கிரிக்கெட்டில் இருந்து தற்போதைய துணை கேப்டன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஒன்றாக விளையாடி வந்திருக்கிறார்கள். இவர்கள் கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் யுவராஜ் சிங்கின் பங்கு இருந்து வருகிறது.

- Advertisement -

யுவராஜ் பட்டறை

அபிஷேக் ஷர்மாவுக்கு ஆரம்ப காலகட்டத்தில் பயிற்சியாளராக அவருடைய தந்தையை இருந்து வந்திருக்கிறார். பின்பு அவருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கை மேம்படுத்துவதற்கு யுவராஜ் சிங் பெரிய அளவில் உழைத்திருக்கிறார்.

மேலும் அபிஷேக் சர்மாவுக்கு பேட்டிங் திறமைகளை மட்டுமே சொல்லித் தராமல், களத்தில் சக வீரர்களுடன் எவ்வாறு இருக்க வேண்டும், ஒரு போட்டியை எப்படி எடுத்துக் கொண்டு சென்று முடிக்க வேண்டும் என்பது வரையில் பல விஷயங்களை அவருக்கு கற்றுக் கொடுத்து வந்திருக்கிறார்.

- Advertisement -

கண் வைத்திருக்கிறேன்

தற்போது அபிஷேக் ஷர்மா துபாயில் வெளியில் சென்று புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பதில் அளித்துள்ள யுவராஜ் சிங் “உன் மீது என் கண் இருக்கிறது மிஸ்டர் பிராங்க்” என்று எச்சரிக்கை செய்யும் விதமாக நகைச்சுவையாக பாராட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க : பங்களாதேஷ் மேட்ச்ல கில் சொல்லியும் அபிஷேக் கேட்கல.. ஆனா இவங்கதான் சிறந்த ஜோடி – இர்பான் பதான் பேட்டி

அபிஷேக் சர்மா தான் சிக்ஸர்கள் அடிப்பது குறித்து கூறிய பொழுது “நீ ஒரு சிக்ஸர் அடித்தால் மற்ற வீரர்களும் சிக்ஸர் அடிப்பதற்கு வாய்ப்பு கொடு என யுவராஜ் சிங் பையா எப்பொழுதும் கூறுவார். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். எப்பொழுதும் எல்லா பெருமைகளும் நாமே எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -