ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கில் மட்டுமல்ல, இந்த இருவரும் கிடையாது.. காரணம் இது தான்

0
26

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்த நிலையில், அடுத்த பெரிய தொடராக ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்த தொடர் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி வரும் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இந்த அணியில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இதே போன்று கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

- Advertisement -

3 வீரர்களுக்கும் வாய்ப்பில்லை:

இதற்கு காரணம், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா போன்ற வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், இந்த பேட்டிங் வரிசையை மாற்ற அணி நிர்வாகம் தயங்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் அளித்த பேட்டியில், “ஆமாம், ஆசியக் கோப்பைக்கான அணி ஆகஸ்ட் 19-ல் மும்பையில் தேர்வு செய்யப்படும்.”

“தேர்வுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். உண்மையில், இந்தியா தற்போதைய தொடக்க ஜோடியான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மாவுடன் தொடர விரும்புவதால், கில் கூட அணியில் இடம் பெறுவதற்கு தற்போது போராடி வருகிறார்.”

- Advertisement -

9வது முறையாக பட்டம் வெல்லுமா?

“இங்கிலாந்தில் சிறப்பான தொடரை விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் டி20 அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. ஜெய்ஸ்வாலை டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு தேர்வாளர்கள் கூறியுள்ளனர்,” என்று அந்த நிர்வாகி கூறியுள்ளார். ஆசிய கோப்பை செப்டம்பர் 9-ல் அபுதாபியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் இடையேயான போட்டியுடன் தொடங்கும்.

இதையும் படிங்க: இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி வருவாரா? ஆகாஷ் சோப்ரா சொன்னதை பாருங்க

இந்தியா செப்டம்பர் 10-ல் துபாயில் யுஏஇயை எதிர்கொள்ளும். பரபரப்பான இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14-ல் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த தொடரை 9வது முறையாக வெல்லும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் அணியில் கூட பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் இந்த தொடரில் இந்தியா தான் பலமான அணியாக விளங்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -