ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த 41 ஆண்டுகளில் இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் முதன்முறையாக பலப்பரீட்சை நடத்தியது.
ஆனால் வழக்கம் போல் இந்தியாவை வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா கடும் அதிருப்தி அடைந்தார். ரன்னர் அப் பட்டத்தை வென்றதற்கான பரிசுத்தொகை வழங்கப்பட்ட செக்கை வாங்கிக் கொண்ட சல்மான் அலி ஆகா மேடையிலே தூக்கி எறிந்து விட்டு சென்றார்.
பேட்டிங் சொதப்பல்:
அப்போது தோல்வி குறித்து சல்மான் அலி அகாடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இது ஏற்றுக்கொள்ள கடினமான உண்மை. பேட்டிங்கில் நாங்கள் நன்றாக முடிக்க முடியவில்லை. பவுலிங்கில் நாங்கள் எல்லாவற்றையும் கொடுத்தோம். நன்றாக முடித்திருந்தால், கதை வேறாக இருந்திருக்கும்.
ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய முடியவில்லை. அதிக விக்கெட்டுகளை இழந்தோம். அதனால்தான் நாங்கள் விரும்பிய ரன்களை அடிக்க முடியவில்லை. எங்கள் பேட்டிங்கை விரைவில் சரிசெய்ய வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பாக, அற்புதமாக பந்து வீசினார்கள்.
6 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட்டது. நாங்கள் ஆட்டத்தை கையில் வைத்திருப்பதாக நினைத்தோம். பவுலர்கள் மிக நன்றாக வீசினார்கள். அவர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும், ஆனால் பேட்டிங் ஒரு கவலையாக இருந்தது. இந்த ஆசிய கோப்பையில் பயணம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம்.
மீண்டு வருவோம்:
நாங்கள் மிகச் சிறப்பாக போராடினோம். ஒரு அணியாக பெருமை கொள்கிறோம். முன்னோக்கி செல்ல இன்னும் நிறைய இருக்கிறது. நாங்கள் மேம்பட்டு வலுவாக திரும்பி வருவோம் என்று என்று சல்மான் அலி அகா தெரிவித்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்க விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில், பின்வரிசை வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் 180 ரன்கள் குவித்திருக்கலாம்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் அணியை வென்றும்.. ஆசியக் கோப்பையை வாங்காமல் புறக்கணித்த இந்தியா – என்ன நடந்தது?
ஆனால் அதன் பின் விளையாடிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் அணியில் வெறும் மூன்று பேர் மட்டும் தான் இரட்டை இலக்கத்தை பெற்றிருந்தனர். அதில் ஒருவரின் ஸ்கோர் 14 ரன்கள் ஆகும். மற்ற ஏழு பேருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்திருப்பது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.






