ஆசிய கோப்பை 2025: இந்த தொடரின் ரூல்ஸ், புள்ளிகள் விவரம் என்ன? சூப்பர் 4 எப்படி நடைபெறும்?

0
75

ஆசிய நாடுகளை ஒருங்கிணைக்கும் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர் தான் . 1984-ல் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளையும், மறக்க முடியாத மோதல்களையும் உருவாக்கியுள்ளது. 2025-ல், 17-வது சீசனாக இந்தத் தொடர் டி20 வடிவத்தில் நடைபெறவுள்ளது.

இது 2016 மற்றும் 2022-க்குப் பிறகு மூன்றாவது முறையாகும். முந்தைய டி20 சீசன்களில் இந்தியாவும் இலங்கையும் வென்றன. கடந்த சீசனை காட்டிலும், பல அணிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்திக்கின்றன. கடந்த தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தற்போது இல்லை.

- Advertisement -

அதேபோல் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு இந்தத் தொடர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். முதல் முறையாக, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் போன்ற நாடுகள் பங்கேற்பதால், இந்தத் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் போட்டியிடுகின்றன.

இந்தத் தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில், துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும். இந்தியா தான் இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் சிக்கல்கள் காரணமாக நடுநிலையான இடமாக யூ.ஏ.இ தேர்ந்தெடுக்கப்பட்டது.

- Advertisement -

ஆசிய கோப்பை 2025 வடிவம்

இந்த ஆசிய கோப்பையில் முதல் முறையாக எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஐந்து முழு உறுப்பு அணிகள் ஆன இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் 2024 ஏ.சி.சி பிரீமியர் கோப்பை மூலம் யு.ஏ.இ, ஓமன், ஹாங்காங் ஆகியவை தகுதி பெற்றன. இந்த எட்டு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

குரூப் ஏ : இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐ.ஏ.இ
குரூப் பி: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங்

ஒவ்வொரு குழுவிலும் அணிகள் ஒரு முறை ஒருவருக்கொருவர் மோதும் ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடும். இது ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளை உறுதி செய்கிறது. வெற்றிக்கு 2 புள்ளிகள், டை அல்லது மழையாடல ரத்தானால் 1 புள்ளி, தோல்விக்கு 0 புள்ளிகள் வழங்கப்படும். நெட் ரன் ரேட் முக்கியப் பங்கு வகிக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் கட்டத்திற்கு முன்னேறும்.

சூப்பர் ஃபோர் விவரங்கள்:


சூப்பர் ஃபோர் என்பது ஆசிய கோப்பை 2025-ன் நாக்அவுட் கட்டமாகும். பிற தொடர்களில் நேரடியாக அரையிறுதிக்கு செல்வதற்கு மாறாக, இதில் குழு A மற்றும் குழு B-யிலிருந்து முதல் இரண்டு அணிகள் ஒரு குழுவாக இணைந்து மற்றொரு ரவுண்ட்-ராபின் போட்டியில் விளையாடும்.

இதையும் படிங்க: நான் பந்து வீசும் போது எம்எஸ் தோனி இதை மட்டும் செய்ய சொல்லி கேட்பார்.. சிஎஸ்கே வீரர் நூர் அகமது சுவாரஸ்யம்

இந்தக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோதும், இதனால் ஒவ்வொரு அணிக்கும் மூன்று போட்டிகள் கிடைக்கும். இதிலும், வெற்றிக்கு 2 புள்ளிகள், டை மற்றும் போட்டி ரத்தானால் 1 புள்ளி, தோல்விக்கு 0 புள்ளிகள் தரப்படும். புள்ளிகளில் சமநிலையில் இருந்தால், நெட் ரன் ரேட் முடிவு செய்யும். இந்தக் கட்டத்தின் முடிவில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28-ல் துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

- Advertisement -