அஸ்வின் பந்துவீச்சில் செய்திருக்கும் புது மாற்றம்.. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் வியப்பு

0
306
Ashwin

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா இங்கிலாந்து மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்கி விட்டது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் அவர் எதிர்பார்த்ததைப் போலவே டாசை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து கொண்டார்.

- Advertisement -

அதே சமயத்தில் இங்கிலாந்து அணி முழுக்க முழுக்க சுழற் பந்துவீச்சை மட்டுமே நம்பி, மார்க் வுட் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக இருக்க, ஜேம்ஸ் ஆண்டர்சனை நீக்கி ஒரே வேகப்பந்துவீச்சாளர் உடன் வந்திருக்கிறது.

இன்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தனது வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜை வைத்து ஆட்டத்தை துவங்கினார். எந்தவித சிரமமும் இல்லாமல் இந்திய வேகப்பந்து வீச்சை எதிர்கொண்ட இங்கிலாந்து துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தது.

இந்த ஜோடியில் பென் டக்கெட்டை 35 ரன்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார். மேலும் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலியை 20 ரன்களில் வெளியே அனுப்பினார். நடுவில் ரவீந்திர ஜடேஜா போப் டிக்கெட்டை ஒரு ரன்னில் கைப்பற்றினார். 60 ரண்களில் மூன்று விக்கெட்டை திடீரென இங்கிலாந்து இழந்துவிட்டது.

- Advertisement -

இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பந்துவீச்சில் ஒரு புது மாற்றத்தை செய்திருக்கிறார். அவர் பந்து வீசுவதற்காக எப்பொழுதும் நேருக்கு நேராக ஓடி வந்து, உடலை நேராக வைத்து ஓபன் செஸ்ட்டில் பந்து வீசக்கூடியவர். பொதுவாக ஆப் ஸ்பின்னர்கள் ஓரத்தில் இருந்து அதாவது சைடில் இருந்து பந்து வீசக்கூடியவர்கள்.

இந்த நிலையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை நேராக ஓடிவந்து வீசுவதற்கு பதிலாக, கொஞ்சம் கிராஸ் ஆக இருந்து ஓடி வந்து வீச ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவர் வழக்கம்போல் ஓபன் செஸ்ட்டில் வீசுகிறார். ப்ந்து வீச்சுக்கான ஓட்டத்தில் மட்டுமே முறையை மாற்றி இருக்கிறார். இதற்கான காரணத்தை அவர் கூறும் பொழுதுதான் தெரியவரும்.

இதையும் படிங்க : “வருஷ கடைசியில கேளுங்க.. இனி டெஸ்ட் கிரிக்கெட்ல வேற மாதிரி என்னை பார்ப்பிங்க?” – கில் அதிரடி சவால்

தற்பொழுது மேற்கொண்டு எந்த விக்கெட்களையும் இங்கிலாந்து அணி விடாமல் மூன்று விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருக்கிறது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு துவங்கும் செஷன் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.