“உ.கோ-க்கு அஷ்வின் வர மாட்டார்.. மொத்தமா இந்த நாலு பேர்தான் பவுலிங்ல கலக்குவாங்க!” – ஆரோன் பின்ச் உறுதியான கணிப்பு!

0
3820
Ashwin

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்கும் நாளாக, செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் அனுபவ சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவாரா? என்பது பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட உலகக்கோப்பை இந்திய அணியில் இரண்டு இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் வலதுகை சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் கூட கிடையாது.

எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

கொடுக்கப்பட்ட வாய்ப்பில் ரவிச்சந்திரன் அஸ்வினும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் வித்தியாசமான கருத்து ஒன்றை அஸ்வின் உலகக் கோப்பை வாய்ப்பு பற்றி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“அஸ்வின் இறுதிச் செய்யப்படும் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணிக்குள் வருவதில் சிரமப்படுவார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இவ்வளவு கிரிக்கெட் விளையாடிய ஒருவரிடம் இருந்து, நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரில் மொத்த இந்திய அணியும் பெரிய போட்டிகள் விளையாடுவது தொடர்பாக முக்கியமான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

அஸ்வின் பெரிய போட்டிகளில் நிலைத்து நிற்கக் கூடியவர். அது டெஸ்ட் என்றாலும் சரி டி20 என்றாலும் சரி. அவர் தன் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அனைத்தையும் செய்துள்ளார். எனவே அவர் தன் குழுவைச் சுற்றி ஒரு வழிகாட்டியாக இந்த நேரத்தில் இருந்தால், நான் அதுகுறித்து ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறுதி செய்யப்படும் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்று நினைக்கிறேன்.

நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடரில் டிரண்ட் போல்ட், மிட்சல் ஸ்டார்க், ரபடா மற்றும் குறிப்பாக முகமது சிராஜ் கவனிக்கத்தக்க பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!